Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

கல்வி கடன் வழங்காத வங்கிகள் மீது நடவடிக்கை: ராமதாஸ் வ‌லியுறு‌த்த‌ல்!

கல்வி கடன் வழங்காத வங்கிகள் மீது நடவடிக்கை: ராமதாஸ் வ‌லியுறு‌த்த‌ல்!
, வெள்ளி, 13 ஜூன் 2008 (10:11 IST)
''மாணவர்களுக்கு கல்வி கடன் வழங்காத வங்கிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்'' என்று பா.ம.க. ‌நிறுவன‌ர் ராமதாஸ் வ‌லியுறு‌த்‌‌தியு‌ள்ளா‌ர்.

செ‌ங்க‌ல்ப‌ட்டி‌ல் அவ‌ர் செ‌ய்‌தியாள‌ர்களு‌க்கு அ‌ளி‌த்த பே‌ட்டி‌யி‌ல், தொலைபேசியும் ஒட்டு கேட்கப்படுவதாக வெளியான தகவலை தொடர்ந்து, அதுபற்றி விசாரிக்க விசாரணை கமிஷன் அமைக்க வேண்டும் என்று முதலமைச்சரிடம் கூறினேன். இப்போது எனது தொலைபேசி, ஜி.கே.மணியின் தொலைபேசிகள் தொடர்ந்து ஒட்டு கேட்கப்படுவதாக எனக்கு ரகசிய தகவல் கிடைத்து உள்ளது.

உளவுத்துறைக்கு தலைமை தாங்கும் அதிகாரிகள் இதற்கான உத்தரவை வாய்மொழியாக பிறப்பித்து இருப்பதாகவும் தகவல்கள் கிடைத்து உள்ளன. முதலமைச்சருக்கு தெரியாமல் இவ்வாறு நடைபெறுகிறதா?

இந்திய அரசியல் சட்டத்தின்படி தொலைபேசியை ஒட்டு கேட்பது அடிப்படை உரிமையை மீறுகின்ற செயல் ஆகும். தொலைபேசிகளை ஒட்டு கேட்பது தொடர்பாக உ‌ச்ச ‌நீ‌திம‌ன்ற‌‌ம் சில அறிவுரைகளை வழங்கி உள்ளது. அதன்படிதான் நடக்க வேண்டும்.

தனியார் பொறியியல் கல்லூரிகளில் கல்வி கட்டணம் கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு ரூ.30 ஆயிரம் அதிகம் ஆகும். அரசு நிர்ணயித்த கல்வி கட்டணத்துக்கு மேல் வாங்கவில்லை என்று ஒவ்வொரு கல்லூரியிலும் எழுதி வைக்க வேண்டும். இதற்கு அரசு உரிய ஏற்பாடு செய்ய வேண்டும்.

மாணவர்களுக்கு கல்வி கடன் வழங்காத வங்கிகள் மீது அரசு கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும். அந்த வங்கிகளை இழுத்து மூடவேண்டும். சமச்சீர் கல்வி முறை என்ன ஆனது என்று தெரியவில்லை. சமதர்ம சமுதாயம் உருவாகும் வகையில் இந்த ஆண்டு முதல் சமச்சீர் கல்வியை அமல்படுத்த வேண்டும் எ‌ன்று ராமதா‌ஸ் கூ‌றினா‌ர்.

Share this Story:

Follow Webdunia tamil