முதல்வர் கருணாநிதியின் 85-வது பிறந்த நாளை முன்னிட்டு கூட்டணிக் கட்சித் தலைவர்கள் பங்கேற்கும் பொதுக்கூட்டம் தீவுத் திடலில் செவ்வாய்க்கிழமை மாலை நடைபெறுகிறது
மத்திய அமைச்சர் பிரணாப் முகர்ஜி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி பொதுச்செயலர் பிரகாஷ் காரத், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி தேசியச் செயலர் டி.ராஜா மற்றும் மத்திய அமைச்சர்கள் ரகுவந்த் பிரசாத் சிங், அன்புமணி ராமதாஸ், பிரபுல் படேல் ஆகியோர் கலந்து கொள்கின்றனர்.
பொதுக் கூட்டத்திற்காக தீவுத் திடலில் கப்பல் தண்ணீரில் மிதப்பது போலவே மேடை அமைக்கப்பட்டு உள்ளது.
பிறந்த நாளை முன்னிட்டு செவ்வாய்க்கிழமை காலை அண்ணா, பெரியார் நினைவிடங்களில் முதல்வர் கருணாநிதி அஞ்சலி செலுத்துகிறார்.