Newsworld News Tnnews 0806 02 1080602006_1.htm

Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

முடிதிருத்தும் தொழிலாளர்களது கோ‌ரி‌க்கை

ஈரோடு செ‌ய்‌தியாள‌ர்

Advertiesment
முடிதிருத்தும் தொழிலாளர்களது கோ‌ரி‌க்கை
, திங்கள், 2 ஜூன் 2008 (12:25 IST)
முடிதிருத்தும் தொழிலாளர்களை தாழ்த்தப்பட்டோர் பட்டியலில் சேர்க்க வேண்டும் என தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

மருத்துவர் சமூக நலசங்கம் மற்றும் முடிதிருத்தும் தொழிலாளர்கள் நலசங்கம் சார்பாக முப்பெரும் விழா ஈரோட்டில் நடந்தது. விழாவில் முடிதிருத்தும் தொழிலாளர் சஙக் மாநில தலைவர் நடேசன் கலந்துகொண்டு பேசினார்.

கூட்டத்தில் கீழ்கண்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.

முடிதிருத்தும் தொழிலாளர்களுக்கு இலவச வீட்டுமனை பட்டா வழங்கவேண்டும்.மருத்துவசமூகத்திற்கு மருத்துவ படிப்பில் தனி இட ஒதுக்கீடு வழங்கவேண்டும்.

மருத்துவ சமூகத்தை தாழ்த்தப்பட்டோர் பட்டியிலில் சேர்க்க வேண்டும். மிகவும் பிற்படுத்தப்பட்டோருக்கான 20 சதவீத ஒதுக்கீட்டில் தனி இட ஒதுக்கீடு வழங்கவேண்டும்.

முடிதிருத்தும் தொழிலாளர்களுக்கு இலவச மின்சாரம் வழங்கவேண்டும். உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.

Share this Story:

Follow Webdunia tamil