கேரளாவில் நடைபெற்ற தேசிய அளவில் பளுதூக்கும் போட்டியில் தங்கப் பதக்கங்களை வென்ற தமிழக வீரர் அன்புக்கு ரூ.10 லட்சம் வழங்கி முதல்வர் கருணாநிதி உத்தரவிட்டுள்ளார்.
இது குறித்து தமிழக அரசு இன்று வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், திருவள்ளூர் மாவட்டம், காக்களூர் கிராமத்தைச் சேர்ந்த அன்பு என்ற பளுதூக்கும் வீரர் உலக அளவிலும், ஆசிய அளவிலும், தேசிய அளவிலும் பல்வேறு பளுதூக்கும் போட்டிகளில் பங்கு பெற்று 15 தங்கப் பதக்கங்களும், 3 வெள்ளி பதக்கங்களையும், 2 வெண்கல பதக்கங்களும் வென்று தமிழகத்துக்கு பெருமை சேர்த்துள்ளார்.
அண்மையில் ஆகஸ்டு 2007-ல் கேரளாவில் நடைபெற்ற தேசிய பளுதூக்கும் போட்டிகளில் சாதனை படைத்து ஒட்டுமொத்த சாம்பியனுக்கான தங்கப் பதக்கத்தையும் வென்றுள்ளார்.
எளிய குடும்பத்தில் பிறந்து விளையாட்டுத் துறையில் குறிப்பிடத்தக்க சாதனைகளை புரிந்துள்ள அன்புவின் ஆற்றலை ஊக்குவித்து பாராட்டும் வகையிëல் அவருக்கு முதலமைச்சர் கருணாநிதி ரூ.10 லட்சம் நிதி உதவி வழங்க உத்தரவிட்டுள்ளார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.