சென்னை குடிநீர் வழங்கல் மற்றும் கழிவு நீரகற்று வாரியத்தில் 35 வாரிசுதாரர்களுக்கு பணி நியமன ஆணையை உள்ளாட்சித்துறை அமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று வழங்கினார்.
சென்னை குடிநீர் வாரியத்தில் பணியில் இருக்கும்போது மரணமடைந்த வாரிசுதாரர்கள் 35 பேருக்கு கருணை அடிப்படையில் சென்னை தலைமை செயலகத்தில் பணி நியமன ஆணையை அமைச்சர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்.
இதுவரை 89 வாரிசுதாரர்கள் களப்பணியாளர்களாகவும், ஒருவர் இளநிலை உதவியாளராகவும் ஆக மொத்தம் 90 பேர்கள் கருணை அடிப்படையில் நியமிக்கப்பட்டுள்ளார்கள் என்று தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.