அடுத்த மக்களவைத் தேர்தலில் தமிழகத்தில் அ.இ.அ.தி.மு.க. வுடன் கூட்டணி வைப்பதற்கு பா.ஜ.க. தயாராக உள்ளதென்று அக்கட்சியின் தலைவர் ராஜ்நாத் சிங் தெரிவித்தார்.
இதுகுறித்துச் சென்னையில் இன்று செய்தியாளர்களைச் சந்தித்த அவர், "பா.ஜ.க. கூட்டணி ஒரு ஜனநாயகமான கூட்டணி. இதில் சேர அ.இ.அ.தி.மு.க. தயாராக இருந்தால் நாங்களும் தயார். எங்கள் கதவுகள் திறந்தே இருக்கின்றன" என்றார்.
ஒகேனக்கல் கூட்டுக் குடிநீர்த் திட்ட விவகாரம் குறித்துக் கேட்டதற்கு, "கர்நாடகாவில் புதிய அரசு அமைந்ததும் ஒரு சுமூகமான தீர்வுகாண முடியும்" என்றார் அவர்.
மத்திய அமைச்சர் டி.ஆர்.பாலு மீது எழுந்துள்ள குற்றச்சாற்று பற்றிக் கூறுகையில், இது தொடர்பாக ஒரு தெளிவான விளக்கத்தை நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் பிரதமர் தாக்கல் செய்ய வேண்டும் என்று ராஜ்நாத் சிங் வலியுறுத்தினார்.