சென்னை அண்ணா சர்வதேச விமான நிலையத்தில் இருந்து 2.7 கிலோ ஹெராயினை சுங்கத்துறை அதிகாரிகள் கைப்பற்றியுள்ளனர். இவற்றின் மதிப்பு சர்வதேச அளவில் ரூ.2.7 கோடியாகும்.
டெல்லியில் இருந்து இன்று சென்னை விமான நிலையம் வந்த பிலிப்பைன்ஸை சேர்ந்த ராஷல் டேக் விங்க் (35) என்பவரை வருவாய் புலனாய்வுத்துறை அதிகாரிகள் மற்றும் சுங்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர்.
அப்போது, பாலிதீன் பையில் 2.7 கிலோ ஹெராயின் இருப்பதை கண்டுபிடித்தனர். அவற்றை பறிமுதல் செய்த சுங்கத்துறையினர் அவரை கைது செய்தனர். இந்த ஹெராயின் சர்வதேச மதிப்பு ரூ.2.7 கோடியாகும்.
விசாரணையில், கோலாலப்பூரில் இருந்து பிலிப்பைன்ஸ் செல்ல வந்தது தெரிந்தது.
இதேபோல், நடந்த மற்றொரு நிகழ்வில் திருவாரூரை சேர்ந்த அழகேசன் (30) என்பவர் சூட்கேசில் வைத்து கடத்திய கேட்டமைன் ஹைட்ரோகுளோரைட் என்ற போதை பவுடரை சுங்கத்துறையினர் கைப்பற்றினர். சர்வதேச அளவில் இவற்றின் மதிப்பு ஒரு கோடி ரூபாய் ஆகும்.
கைதான இரண்டு பேரையும் சுங்கத்துறையினர் விமான நிலைய காவல்துறையினரிடம் ஒப்படைத்தனர்.