Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

வேலூ‌ர் ஆ‌யிர‌க்கண‌க்‌கி‌ல் 10ஆ‌ம் வகு‌ப்பு விடைத்தாள் எரிந்து நாசம்!

வேலூ‌ர் ஆ‌யிர‌க்கண‌க்‌கி‌ல் 10ஆ‌ம் வகு‌ப்பு விடைத்தாள் எரிந்து நாசம்!
, வெள்ளி, 25 ஏப்ரல் 2008 (10:19 IST)
வேலூரில் 10ஆ‌ம் வகு‌ப்பு விடைத்தாள் திருத்தும் மையத்தில் நேற்று இரவு பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. இதில் ஆயிரக்கணக்கான விடைத்தாள்கள் எரிந்து நாசமானது.

வேலூர் ஊரீஸ் மேல்நிலைப்பள்ளியில் கடந்த 21ஆ‌ம் தேதி முதல் 10ஆ‌ம் வகு‌‌ப்பு விடைத்தாள்கள் திருத்தும் பணி நடந்து வருகிறது. இந்த மையத்தில் உள்ள மத்திய மண்டபத்தில் மொத்தம் 30 ஆயிரம் விடைத்தாள்கள் திருத்தப்பட்டு வருகின்றன. இந்த விடைத்தாள்கள் அனைத்தும் சென்னை, ஈரோடு, சேலம், கிருஷ்ணகிரி, மதுரை, விழுப்புரம் ஆகிய மாவட்டங்களைச் சேர்ந்தவை என்று கூறப்படுகிறது.

விடைத்தாள்கள் திருத்தும் பணி முடிவடைந்ததும் ஆசிரியர்கள் திருத்திய விடைத்தாள்களை மையத்தில் உள்ள பெரிய அறையில் வைத்து பூட்டி விடுவார்கள். திருத்த வேண்டிய விடைத்தாள்களும் அதே அறையின் இன்னொரு பக்கத்தில் வைக்கப்பட்டு உள்ளது. இந்த இடத்தில் 24 மணி நேரமும் ாதுகாப்பு போடப்பட்டு உள்ளது.

நேற்று இரவு 10 மணி அளவில் விடைத்தாள்கள் வைக்கப்பட்டு இருந்த அறையில் ‌தீ கொழு‌ந்து ‌வி‌‌ட்டு எ‌ரி‌ந்தது. இதைப் பார்த்த காவ‌ல‌ர்க‌ள் அதிர்ச்சி அடைந்து தீயணைப்பு நிலையத்திற்கும், உயர் அதிகாரிகளுக்கும் தகவல் கொடுத்தனர். தீயணைப்பு படையினர் விரைந்து வந்து தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர். அதற்குள் ஆயிரக்கணக்கான விடைத்தாள்கள் எரிந்து நாசமானது.

தகவல் கிடைத்ததும் வேலூர் சரக காவ‌ல்துறை தலைவ‌ர் சுந்தரமூர்த்தி, மாவட்ட காவ‌ல்துறை க‌ண்கா‌ணி‌ப்பாள‌ர் அறிவுச்செல்வம், மாவட்ட முதன்மை கல்வி அதிகாரி பிச்சை ஆகியோர் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர்.

தீ விபத்து குறித்து மாவட்ட முதன்மை கல்வி அதிகாரி பிச்சை கூறுகை‌யி‌ல், வெளிமாவட்டங்களைச் சேர்ந்த ஆயிரக்கணக்கான 10ஆ‌ம் வகு‌ப்பு விடைத்தாள்கள் இந்த மையத்தில் வைக்கப்பட்டு உள்ளன. தீ விபத்து பற்றி விசாரணை நடத்திக்கொண்டு இருக்கிறோம். விசாரணை முடிந்து பிறகுதான் சேதம் எந்த அளவு என்பதை கூறமுடியும் என்றார்.

Share this Story:

Follow Webdunia tamil