பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழக அரசு மருத்துவர்கள் சங்கம் சார்பில் திருச்சியில் இன்று ஒருநாள் உண்ணா விரத போராட்டம் நடைபெறுகிறது.
அரசு மருத்துவமனைகளில் காலியாக உள்ள மருத்துவ பணியிடங்களை நிரப்ப கோரியும், 40 மணி நேர பணி நேரத்தை குறைக்க கோரியும், குடும்ப நலன் மற்றும் தொழுநோயாளிகள் துறையில் உள்ள துணை இயக்குனர் பணியிடங்களை நிரம்பக் கோரியும் தமிழ்நாடு அரசு மருத்துவர்கள் சங்கம் சார்பில் திருச்சி இன்று உண்ணாவிரத போராட்டம் நடைபெறுகிறது.
இந்த போராட்டத்தில் கலந்து கொண்ட திருச்சி மருத்துவ சங்கத் தலைவர் செல்வபாண்டியன் செய்தியாளர்களிடம் கூறுகையில், தமிழகத்தில் மருத்துவர்களுக்கு வழங்கும் ஊதியம் இரண்டில் மூன்று மடங்கு ஆந்திரா, கர்நாடகா, கேரளா ஆகிய மாநிலங்களில் மருத்துவர்களுக்கு வழங்கப்படுகிறது என்றார்.