Newsworld News Tnnews 0804 21 1080421033_1.htm

Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

சத்துணவு மையங்களில் 10,327 ஊழியர்கள் நியமனம்: பூங்கோதை!

Advertiesment
ச‌த்துணவு மைய‌‌ங்க‌‌‌ள் ஊ‌ழிய‌ர்க‌ள் பூ‌ங்கோதை ச‌ட்ட‌ப் பேரவை
, திங்கள், 21 ஏப்ரல் 2008 (15:42 IST)
ச‌த்துணவு மைய‌‌ங்க‌‌ளி‌ல் ‌விரை‌வி‌ல் 10,327 ஊ‌ழிய‌ர்க‌ள் பு‌திதாக ‌நிய‌மி‌க்க‌ப்படுவா‌ர்க‌ள் எ‌ன்று அமை‌ச்ச‌ர் பூ‌ங்கோதை கூ‌றினா‌‌ர்.

ச‌ட்ட‌ப் பேரவை‌யி‌ல் இ‌ன்று அமை‌ச்ச‌ர் பூ‌ங்கோதை பேசுகை‌யி‌ல், சத்துணவு மையங்களிலும், குழந்தைகள் மையங்களிலும் காலியாக உள்ள 10,327 பணியிடங்கள் இந்த ஆண்டு நிரப்பப்படும்.

குடும்ப வன்முறை தடுப்பு சட்டத்தின் கீழ் வருகின்ற வழக்குகளை ஆய்வு செய்து தீர்வு காண மாவட்டம் தோறும் தனி அதிகாரியும் சென்னைக்கு 2 தனி அதிகாரிகளும் நியமிக்கப்படுவார்கள்.

சத்துணவு மையங்களில் சரியான முறையில் பொருட்களை எடை போட்டு வழங்க ரூ.50 லட்சம் செலவில் மின்னணு தராசு வழங்கப்படும். தமிழகம் முழுவதும் உள்ள அனைத்து சிறார்களுக்கு வசதிக்காக ரூ.81 லட்சம் ஒதுக்கப்படுகிறது. தமிழ்நாட்டில் உள்ள அனைத்து அரவாணிகள் குறித்த கணக்கெடுப்பு விவரங்கள் அடங்கிய தகவல் தொகுப்பு ஏற்படுத்தப்படும் எ‌ன்று தெ‌ரி‌வி‌த்தா‌ர்.

Share this Story:

Follow Webdunia tamil