Publish Date: Mon, 21 Apr 2008 (12:06 IST)
Updated Date: Mon, 21 Apr 2008 (12:06 IST)
புதுக்கோட்டையி்ல் கோயிலின் சுற்றுச் சுவர் இடிந்து விழுந்ததில் பெண் பலியானார்.
புதுக்கோட்டையில் ஸ்ரீ பைரவ விநாயகர் கோயில் அருகே உள்ள மரத்தில் பூக்களை ரங்கம்மாள் (60) என்பவர் பறித்துக் கொண்டிருந்தார். அப்போது திடீரென கோயில் மதில் சுவர் இடிந்து இவர் மீது விழுந்தது.
இதில் பலத்த காயம் அடைந்த ரங்கம்மாளை அருகில் உள்ள அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலன்யின்றி ரங்கம்மாள் இறந்தார்.