''தமிழகத்தில் உள்ள நூலகங்கள் அனைத்திற்கும் கணினி வசதி செய்து தரப்படும்'' என்று பள்ளி, கல்வித்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு தெரிவித்தார்.
சட்டப் பேரவையில் இன்று கேள்வி நேரத்தின் போது அமைச்சர் தங்கம் தென்னரசு கூறுகையில், மாவட்ட அளவிலான மைய நூலகங்களில் தற்போது கணினி, இணையதள வசதி இருக்கின்றன. இதை கிளை நூலகங்கள் வரையில் படிப்படியாக கொண்டு செல்வதற்கு அரசு நடவடிக்கை எடுத்துவருகிறது.
இந்தியாவிலேயே தமிழகத்தில்தான் அனைத்து பஞ்சாயத்துகளிலும் நூலகங்கள் அமைக்கப்பட்டு இருக்கிறது. தேவைப்படும் கிராமங்களில் பகுதி நேர நூலகங்கள் அமைப்பதற்கு உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று அமைச்சர் தங்கம் தென்னரசு கூறினார்.