Publish Date: Mon, 14 Apr 2008 (15:46 IST)
Updated Date: Mon, 14 Apr 2008 (15:46 IST)
சட்டமேதை அண்ணல் அம்பேத்கரின் 118 ஆவது பிறந்த நாளை முன்னிட்டு அவரின் திருவுருவச் சிலைக்கு தலைவர்கள் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.
சென்னை துறைமுக வளாகத்தில் அமைந்துள்ள அவரின் திருவுருவச் சிலைக்கு அருகில் வைக்கப்பட்டிருந்த புகைப்படத்திற்கு உள்ளாட்சித் துறை அமைச்சர் மு.க.ஸ்டாலின், செய்தித்துறை அமைச்சர் பரிதி இளம்வழுதி, பால்வளத்துறை அமைச்சர் மதிவாணன், சட்டப் பேரவைத் துணைத் தலைவர் வி.பி.துரைசாமி உள்ளிட்டோர் மலர் தூவி மரியாதை செலுத்தினர்.
பல்லாவரம் காவல் நிலையம் அருகே உள்ள அம்பேத்கர் உருவச் சிலைக்கு மத்திய கப்பல் போக்குவரத்து அமைச்சர் டி.ஆர்.பாலு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.
சத்தியமூர்த்தி பவனில் மலர்களால் அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த அம்பேத்கரின் திருவுருவப் படத்திற்கு தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் எம்.கிருஷ்ணசாமி, சட்டப்பேரவை காங்கிரஸ் கட்சி தலைவர் டி.சுதர்சனம், கே.விஜயன், பொன்.கிருஷ்ணமூர்த்தி, சக்திவடிவேல் உள்ளிட்டோர் மலர் தூவி மரியாதை செலுத்தினார்கள்.
முன்னதாக துறைமுக வளாகத்தில் உள்ள அம்பேத்கர் உருவச் சிலைக்கும், கிரீன்வேஸ் சாலையில் உள்ள அம்பேத்கர் மணி மண்டபத்திலும் கிருஷ்ணசாமி மலர் தூவி மரியாதை செலுத்தினார்.
சைதாப்பேட்டை கால் நடை மருத்துவமனை அருகே உள்ள அம்பேத்கர் திருவுருவச் சிலைக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ் மாநில செயலாளர் என்.வரதராஜன், செயற்குழு உறுப்பினர் தே.லட்சுமணன், தென் சென்னை மாவட்ட செயலாளர் பீமாராவ் ஆகியோர் மரியாதை செலுத்தினர்.
நேரு உள்விளையாட்டு அரங்க முகப்பில் அமைந்துள்ள அம்பேத்கர் சிலைக்கு திராவிடர் கழக தலைவர் கி.வீரமணி, துறைமுக வளாகத்தில் உள்ள சிலைக்கு காங்கிரஸ் எம்.எல்.ஏ. ஜெயக்குமார், சமதா கட்சி மாநில தலைவர் வி.பாஸ்கரன் மற்றும் நிர்வாகிகள், லோக் ஜன சக்தி கட்சி மாநில தலைவர் ச.வித்யாதரன், தேசிய பொதுச் செயலாளர் பெ.சந்திரகேசன், அகில இந்திய மூவேந்தர் முன்னணி கழக நிறுவன தலைவர் டாக்டர் என்.சேதுராமன் மற்றும் நிர்வாகிகள் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.
ஆற்காடு சாலையில் உள்ள அம்பேத்கர் சிலைக்கு தமிழ் மாநில முஸ்லிம் லீக் தலைவர் ஷேக் தாவூத் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.
Webdunia
Publish Date: Mon, 14 Apr 2008 (15:46 IST)
Updated Date: Mon, 14 Apr 2008 (15:46 IST)