உயர்கல்வி நிறுவனங்களில் பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு 27 விழுக்காடு இட ஒதுக்கீடு சட்டம் செல்லும் என்று உச்ச நீதிமன்றம் அளித்த தீர்ப்பை சட்டப்பேரவையில் உறுப்பினர்கள் மகிழ்ச்சி தெரிவித்தனர்.
பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு உயர்கல்வி நிறுவனங்களில் 27 விழுக்காடு இட ஒதுக்கீடு சட்டம் செல்லும் என்று உச்ச நீதிமன்றம் இன்று தீர்ப்பு வழங்கியது. இந்த தகவலை சட்டப் பேரவையில் அமைச்சர் அன்பழகன் தெரிவித்தார்.
உடனே உறுப்பினர்கள் அனைவரும் மேஜையை தட்டி வரவேற்பும், மகிழ்ச்சியும் தெரிவித்தனர். பா.ம.க தலைவர் ஜி.கே.மணி பேசுகையில், இது தமிழக அரசுக்கும், பா.ம.க.வுக்கும் கிடைத்த மாபெரும் வெற்றி என்றார்.