Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

கூட்டுறவு வங்கிகளில் செ‌ல்பே‌சி விற்பனை: அதிகாரி தகவல்!

வேலு‌ச்சா‌மி

கூட்டுறவு வங்கிகளில் செ‌ல்பே‌சி விற்பனை: அதிகாரி தகவல்!
, வியாழன், 10 ஏப்ரல் 2008 (13:17 IST)
சேலம் மாவட்டத்தில் தொடக்க வேளாண் கூட்டுறவு வங்கிகள் மூலம் செல்பே‌சி, சிம்கார்டு, ரீசார்ஜ் கூப்பன் ஆகியவற்றின் விற்பனை விரைவில் துவக்கப்படுகிறது எ‌ன்றஇப்கோ உழவர் தொடர்பு நிறுவன மாநில மேலாளர் கூறினார்.

தொடக்க வேளாண் கூட்டுறவு வங்கி மூலம் கிராமங்களில் செல்பே‌சி, ரீசார்ஜ் கூப்பன் விற்பனை செய்யும் திட்டம் குறித்த கருத்தரங்கம் சேலம் மத்திய கூட்டுறவு வங்கியில் நடந்தது. சேலம் மண்டல கூட்டுறவு சங்கங்களின் இணைப்பதிவாளர் ஜோகி தலைமை வகித்தார்.

புதிய திட்டம் குறித்து இப்கோ உழவர் தொலைத்தொடர்பு நிறுவன மாநில மேலாளர் ஜின்னா கலந்துகொண்டு பேசினார். அப்போது அவர் கூறியது: தமிழகத்தில் கூட்டுறவு இயக்கம் துவக்கப்பட்டதில் இருந்து சேலம் மாவட்டம் முதலிடத்தில் இருந்து வருகிறது. உலகிலேயே இந்தியாவில் தான் செல்பே‌சி அதிகம் பயன்படுத்தி வருகின்றனர். அதிலும் தமிழகத்தில் தான் செல்பே‌சிகளஅதிகளவில் பயன்படுத்துகின்றனர். அதனால், தமிழகத்தில் செல்பே‌சி கட்டணமும் மிகக்குறைவாகவே உள்ளது.

இப்கோ உழவர் தொலைத்தொடர்பு நிறுவனம் சார்பில் தொடக்க வேளாண் கூட்டுறவு வங்கிகள் மூலம் விவசாயிகளுக்கான கிரீன் சிம்கார்டு, செல்பே‌சி விற்பனை துவக்கப்பட்டுள்ளது. இந்தியாவில் முதலில் உத்தர பிரதேச மாநிலத்தில் துவக்கப்பட்டது. தமிழகத்தில் விழுப்புரம், கடலூர், ஈரோடு மாவட்டங்களை அடுத்து சேலத்தில் விரைவில் கிரீன் சிம்கார்டு, செல்பே‌சி விற்பனை துவக்கப்படவுள்ளது.

தனியார் நிறுவனங்கள் இப்போது செல்பே‌சி விற்பனையில் அதிக ஆர்வம் காட்டுகின்றன. கிராமங்களில் செல்பே‌சி விற்பனைக்கான மார்க்கெட் சிறப்பாக உள்ளது. அதனால், தனியார் நிறுவனங்களை முந்திக்கொண்டு தொடக்க வேளாண் கூட்டுறவு வங்கிகள் கிராமங்களில் சிம்கார்டு, செல்பே‌சி விற்பனை அதிகரிக்கப்படும்.

தொடக்க வேளாண் கூட்டுறவு வங்கிகள் மூலம் விற்பனை செய்யப்படும் செல்பே‌சிக‌ளவெளிச்சந்தையை விட மிகவும் குறைவான விலைக்கு தரமானதாக விற்பனை செய்யப்படும். செ‌ல்பே‌சிக‌ளபழுது ஏற்பட்டால் இரண்டு முதல் நான்கு நாட்களில் சரிசெய்து கொடுக்கப்படும். மேலும், இரண்டு ஆண்டு வரை உத்திரவாதமும் வழங்கப்படும். செல்பே‌சி பழுதபா‌ர்‌த்தகொடுக்க தமிழகத்தில் ஆறு பகுதிகளில் பழுதபா‌ர்‌க்கு‌மபொ‌றியாள‌ர்க‌ளஅமர்த்தப்படுவர் எ‌ன்றஇப்கோ உழவர் தொடர்பு நிறுவன மாநில மேலாளர் பேசினார்.

Share this Story:

Follow Webdunia tamil