லஞ்சம் வாங்கப்படுவதாக வந்த புகாரின் பேரின் காஞ்சிபுரம் ஆட்சித் தலைவர் அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்புத்துறையினர் இன்று சோதனை நடத்தினர்.
இந்த சோதனையில் அலுவலகத்தில் பணி புரிந்து வந்த பாஸ்கரன் (50) என்பவர் சிக்கினார்.
பின்னர் கன்னியப்பா நகரில் உள்ள அவரது வீட்டில் நடந்த 3 மணி நேர சோதனையில் முக்கிய ஆவணங்கள், ரூ.18,000 ரொக்கப் பணம் சிக்கியது.