புதிய தொழிற்சாலைகளுக்கான திட்டங்களுக்கு சுற்றுச்சூழல் தாக்கத்தை ஆராய்ந்து அறிய மாநில அளவில் ஒரு குழு அமைக்கப்பட்டுள்ளது.
மாநில அரசின் பரிந்துரையின் அடிப்படையில் மத்திய அரசு, தொழிற்சாலைகளுக்கு அனுமதி வழங்க குழுமத்தை ஏற்படுத்தியுள்ளது. இக்குழுமத்தின் தலைவர் மற்றும் உறுப்பினர்கள் தங்கராஜ், ரங்கசாமி, உறுப்பினர் செயலர் பகவான் சிங் ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர்.
இந்த குழுமத்திற்கு தொழில்நுட்ப ரீதியாக பரிந்துரைகளை வழங்க சுற்றுச்சூழல் தாக்கத்தை மதிப்பீடு செய்யும் ஒரு குழு அமைக்கப்பெற்று, அந்த குழுவின் தலைவராக முன்னாள் துணைவேந்தர் முத்தையா மாரியப்பன் நியமிக்கப்பட்டுள்ளார்.
குழுமத்தின் தலைவர் மற்றும் உறுப்பினர்கள் மரியாதை நிமித்தமாக முதலமைச்சர் கருணாநிதியை நேரில் சென்று சந்தித்தனர்.