Newsworld News Tnnews 0804 08 1080408023_1.htm

Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

த‌மிழக ம‌க்களை வ‌‌ஞ்‌சி‌த்து ‌வி‌ட்டா‌ர் கருணா‌நி‌தி: வைகோ கு‌ற்ற‌ச்சா‌ற்று!

Advertiesment
ஒகேன‌க்க‌ல் கருணா‌நி‌தி ம.‌தி.மு.க. பொது‌ச் செயல‌ர் வைகோ
, செவ்வாய், 8 ஏப்ரல் 2008 (13:47 IST)
ஒகேன‌க்க‌ல் ‌விவகார‌த்‌தி‌ல் தனது சொ‌ந்த லாப‌த்‌தி‌ற்காக‌த் த‌‌‌மிழக ம‌க்களை‌க் கருணா‌நி‌தி வ‌ஞ்‌சி‌த்து ‌வி‌ட்டா‌ர் எ‌ன்று ம.‌தி.மு.க. பொது‌ச் செயல‌ர் வைகோ கு‌ற்ற‌‌ம்சா‌ற்‌றி உ‌ள்ளா‌ர்.

ஒகேனக்கல் கூட்டுக் குடிநீர்த் திட்டத்தை நிறைவேற்றக் கோரியும், கர்நாடகத்தில் தமிழர்கள் தாக்கப்பட்டதைக் கண்டித்தும் ம.தி.மு.க. சார்பில் சென்னையில் திங்கள்கிழமை ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

அதில் பே‌சிய வைகோ, "வெண்ணெய் திரண்டு வரும்போது பானை உடைந்தது போல் முதல்வர் கருணாநிதியின் அறிவிப்பு உள்ளது" எ‌ன்றா‌ர்.

"கர்நாடக மாநிலத்தில் தேர்தல் வருவதையொட்டி, அந்த மாநில பாஜக தலைவர் எடியூரப்பா வெறி உணர்வை தூண்டி விடுகிறார். இந்த நிலைக்கு த‌மிழக முதல்வர் கருணாநிதியின் அணுகுமுறையே காரணம். பேரு‌ந்துகளை உடைத்தாலும், எலும்புகளை உடைத்தாலும் ஒகேனக்கல் கூட்டுக் குடிநீர் திட்டத்தை நிறைவேற்றியே தீருவோம் என்று முதல்வர் கூறியது தவறு.

அதனால்தான், கர்நாடக தமிழர்கள் தாக்கப்பட்டனர். ஆனால், தமிழகத்தில் உள்ள கன்னடர்கள் யாரும் தாக்கப்படவில்லை. முதல்வர் கருணாநிதி ஆத்திரமூட்டும் வகையில் பேசியதைத் தொடர்ந்துதான் பிரச்னை கிளம்பியது. அதன்பிறகு, மத்திய அமைச்சர் டி.ஆர். பாலுவை விட்டு, தாம் ஒன்றுமே சொல்லவில்லை என்கிறார்" எ‌ன்று‌ம் அவ‌ர் கு‌ற்ற‌ம்சா‌ற்‌றினா‌ர்.

சட்டப் பேரவையில் ஒகேனக்கல் திட்டம் குறித்து தீர்மானத்தை நிறைவேற்றிவிட்டு, தற்போது திடீரென அந்தத் திட்டத்தை ஒத்திவைத்ததாக அறிவித்ததற்கு காரணம் என்ன? எ‌ன்று கே‌ள்‌வி எழு‌‌ப்‌பிய வைகோ, கேனக்கல் கூட்டுக் குடிநீர் திட்டப் பிரச்னையில் இருமாநில மக்களிடையே பகை வளரும் என்பது நியாயம் இல்லை எ‌ன்றா‌ர்.

நம்முடைய தண்ணீரைப் பங்கிடுவதற்து நமக்கே உரிமையில்லையா? தொடர்ந்து ஒவ்வொரு உரிமையாக நாம் இழந்து வருகிறோம். முதல்வர் கருணாநிதி சொந்த லாபத்துக்காக தமிழக மக்களை வஞ்சித்துவிட்டார் என்றார் வைகோ.

Share this Story:

Follow Webdunia tamil