Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

த‌மிழக‌த்‌தி‌ல் ப‌யி‌ர் சேதம்: ஒரு வார‌த்‌தி‌ல் மத்திய குழு அ‌றி‌க்கை!

த‌மிழக‌த்‌தி‌ல் ப‌யி‌ர் சேதம்: ஒரு வார‌த்‌தி‌ல் மத்திய குழு அ‌றி‌க்கை!
, செவ்வாய், 8 ஏப்ரல் 2008 (09:32 IST)
தமிழக‌த்‌தி‌ல் வெள்ளப்பகுதிகளில் மத்திய குழுவினர் இ‌ன்று கடை‌சி நாளாக ஆ‌ய்வு செ‌ய்‌கி‌‌ன்றன‌ர். சேதம் குறித்த அறிக்கையை இன்னும் ஒரு வாரத்தில் அவர்கள் மத்திய அரசிடம் தாக்கல் செ‌ய்‌கிறா‌ர்க‌ள்.

க‌ட‌ந்த மா‌ர்‌ச் மாத‌ம் தமிழக‌த்த‌ி‌ல் பெய்த கன மழையால் நெல்லை, தூத்துக்குடி உள்ளிட்ட தென் மாவட்டங்களிலும், காவிரி டெல்டா மாவட்டங்களிலும் விவசாய பயிர்கள் தண்ணீரில் மூழ்கி நாசமாயின. சேதம் குறித்த அ‌றி‌க்கையை மத்திய அரசுக்கு தமிழக அரசு அனுப்பியதை தொடர்ந்து, சேதங்களை பார்வையிட்டு மதிப்பிடுவதற்காக மத்திய அரசு நிபுணர்குழு ஒன்று த‌‌மிழக‌ம் வ‌ந்து‌ள்ளது.

மத்திய உள்துறை அமைச்சக இணைச் செயலாளர் தர்மேந்திர சர்மா தலைமையிலான இந்தக் குழுவில் நிதி அமைச்சகத்தின் செலவினத்துறை துணை இயக்குநர் தினாநாத், வேளாண்துறையின் புகையிலை மேம்பாட்டு இயக்ககத்தின் இயக்குநர் கே.மனோகரன், நெடுஞ்சாலைத்துறை கண்காணிப்பு பொறியாளர் ஜே.ஜெயச்சந்திரன் ஆகியோர் இடம் பெற்று உள்ளனர்.

இந்த குழுவினர் நேற்று முன்தினம் கடலூர், திருவாரூர், நாகப்பட்டினம் மாவட்டங்களில் மழை, வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளை பார்வையி‌ட்டன‌ர். நேற்று தஞ்சை மாவட்டத்தில் பாதிக்கப்பட்ட பகுதிகளை பார்வையிட்டனர். பின்னர் திருச்சி சென்று ஆய்வு நடத்தின‌ர்.

தஞ்சை மாவட்டத்தில் பயிர்களுக்கு ஏற்பட்ட பாதிப்புகள் குறித்து மாவட்ட ஆட‌்‌சிய‌ர் விஜயராஜ் குமார் மத்திய குழுவினரிடம் விளக்கி கூறினார். மாவட்டத்தில் 68 ஆயிரத்து 887 ஹெக்டேர் நிலத்தில் பயிர்கள் சேதம் அடைந்து இருப்பதாக கூறினார்.

பின்னர் மத்திய நிபுணர் குழுவின் தலைவர் தர்மேந்திர சர்மா கூறுகையில், மழை சேதம் குறித்து மாநில அரசிடம் கூடுதல் தகவல்களை கேட்டு இருப்பதாகவும் அவற்றின் அடிப்படையில் மத்திய அரசுக்கு அறிக்கை அளிப்போம் என்றா‌ர்.

தமிழக அரசின் வருவாய் நிர்வாக ஆணையர் சக்தி காந்ததாஸ் கூறுகையில், மத்திய குழுவினர் ஒரு வாரம் அல்லது 10 நாட்களில் மத்திய அரசுக்கு அறிக்கை அளித்துவிடுவார்கள். மத்திய குழுவினரிடம் சம்பந்தப்பட்ட மாவட்ட கலெக்டர்கள் மழை சேதம் குறித்த விவரங்களை கொடுத்து இருப்பதாகவும், மேலும் சேதம் தொடர்பாக சில கூடுதல் விவரங்களை மத்திய குழுவினர் கேட்டு இருப்பதாகவும், அந்த விவரங்கள் அடங்கிய அறிக்கை ஓரிரு நாட்களில் தயார் செய்யப்பட்டு மத்திய குழுவினரிடம் வழங்கப்படும் என்று கூறினார்.

மாலை‌‌யி‌ல் தூத்துக்குடி மாவட்டத்தில் பாதிக்கப்பட்ட பகுதிகளை பார்வையிட்டனர். அவர்கள் இன்று (8‌ஆ‌ம் தே‌தி) நெல்லை, விருதுநகர், ராமநாதபுரம் மாவட்டங்களில் மழை, சேத பகுதிகளை பார்வையிடுகிறார்கள்.

பின்னர் மத்திய நிபுணர் குழுவினர் சென்னை திரும்புகிறார்கள். நாளை தமிழக அரசின் உயர் அதிகாரிகளுடன் அவ‌‌‌ர்க‌ள் ஆலோசனை நடத்துகிறார்கள்.

அதன்பிறகு அவர்கள் டெல்லி சென்று, தமிழ்நாட்டில் மழை வெள்ளத்தால் ஏற்பட்ட சேத விவரங்கள் குறித்த அறிக்கையை மத்திய அரசிடம் தாக்கல் செய்வார்கள். அதன் அடிப்படையில் மத்திய அரசு தமிழ்நாட்டுக்கு நிவாரண உதவி வழங்கும்.

Share this Story:

Follow Webdunia tamil