புதுச்சேரி அமைச்சர் கந்தசாமி சென்ற விமானத்தில் இன்று காலை திடீர் கோளாறு ஏற்பட்டது. இதையடுத்து சென்னை விமான நிலையத்திலிருந்து புறப்பட்ட அந்த விமானம் அவசரமாக தரையிறக்கப்பட்டது.
சென்னையில் இருந்து டெல்லி செல்லும் இந்தியன் ஏர்லைன்ஸ் விமானம் இன்று காலை 6.45 மணிக்கு புறப்பட்டது. அந்த விமானத்தில் புதுவை அமைச்சர் கந்தசாமி, தமிழக சட்டமன்ற உறுப்பனிர் எச்.வசந்தகுமார் உட்பட 113 பயணிகள் இருந்தனர்.
அந்த விமானம் புறப்பட்ட சிறிது நேரத்திலேயே இயந்திரத்தில் உள்ள கோளாறு கண்டறியப்பட்டது. உடனடியாக அந்த விமானம் அவசரமாக தரையிறக்கப்பட்டது.
பின்னர் அமைச்சர் கந்தசாமி உள்ளிட்ட பயணிகள் வேறு விமானங்களில் டெல்லிக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.
தொழில்நுட்ப கோளாறு உரிய நேரத்தில் கண்டறியப்பட்டதால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது.