Newsworld News Tnnews 0804 02 1080402007_1.htm

Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

கன்னட வெறியர்களை அடக்க கோரி 4ஆ‌ம் தேதி ஆர்ப்பாட்டம்: ராமதாஸ்!

Advertiesment
கர்நாடகா கன்னட மொழி வெறியர்க‌ள் தமிழகம் பா.ம.க ‌நிறுவன‌ர் ராமதாஸ் ஒகேனக்கல்
, வியாழன், 3 ஏப்ரல் 2008 (10:01 IST)
''கர்நாடக தமிழர்களுக்கு எதிராக கலவரத்தில் ஈடுபட்டு வரும் கன்னட மொழி வெறியர்களை அடக்க கோரி தமிழகம் முழுவதும் 4ஆ‌ம் தேதி ஆர்ப்பாட்டம் நடத்தப்படும்'' என்று பா.ம.க ‌நிறுவன‌ர் ராமதாஸ் அறிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவ‌ர் வெ‌ளி‌யி‌ட்டு‌ள்ள அறிக்கையில், ஒகேனக்கல் குடிநீர் திட்டத்திற்கு எதிர்ப்பு என்ற போர்வையில் பெங்களூர் தமிழ்ச்சங்கம் தாக்கப்பட்டிருக்கிறது. உலகப் பொதுமறையாம் திருக்குறளை தந்த திருவள்ளுவரில் சிலையை திறந்து வைக்க முடியாமல் பல ஆண்டுகளாக தடுத்து வரும் கன்னட வெறியர்கள் இன்றைக்கு தமிழ்ச்சங்கத்தின் மீதும் ஆத்திரத்தை காட்டியிருக்கிறார்கள். தமிழ்த் திரைப்படங்களை திரையிட்ட திரையரங்குகளை அடித்து நொறுக்கி இருக்கிறார்கள்.

தமிழகத்தில் இருந்து சென்ற வாகனங்கள் தடுத்து நிறுத்தப்பட்டு தாக்கப்பட்டிருக்கின்றன. கன்னட வெறியர்களின் இத்தகைய அட்டூழியங்களை அடக்கி ஒடுக்காமல் கர்நாடக காவல்துறை வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்கிறது. தமிழர்களுக்கு எதிரான கன்னட வெறியர்களின் வெறுப்பையும், அதன் தொடர்ச்சியாக அங்கு தமிழர்களுக்கு எதிராக நடத்தப்பட்டு வரும் கலவரத்தையும் கண்டிக்கும் வகையிலும், தமிழர்களுக்கு எதிராக கலவரத்தில் ஈடுபட்டு வரும் மொழி வெறியர்களை அடக்கி ஒடுக்க வேண்டும் என்று வலியுறுத்தியும் தமிழகத்தின் அனைத்து மாவட்ட, வட்ட தலைநகரங்களில் 4ஆ‌ம் தேதி கண்டன ஆர்ப்பாட்டங்கள் நடைபெறும்.

இந்த கண்டன ஆர்ப்பாட்டங்களில் பாட்டாளி மக்கள் கட்சியினர் பெருமளவில் பங்கு பெற வேண்டும். அவர்களோடு தமிழ் ஆர்வலர்களும், தமிழர்களின் நலன் நாடுவோர்களும் இந்த கண்டன ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டு கன்னட வெறியர்களுக்கும், அவர்களை தூண்டிவிட்டு அரசியல் ஆதாயம் தேட முற்படும் அரசியல்வாதிகளுக்கும் தகுந்த பாடம் கற்பிக்க முன்வர வேண்டும் என்று ராமதா‌ஸ் கேட்டுக் கொ‌ண்டு‌ள்ளா‌ர்.

Share this Story:

Follow Webdunia tamil