Publish Date: Tue, 01 Apr 2008 (12:47 IST)
Updated Date: Tue, 01 Apr 2008 (12:47 IST)
மதுரை அருகே இரண்டு கிராம மக்களிடையே நடந்த மோதலில் 14 பேர் படுகாயம் அடைந்தனர்.
மதுரை மாவட்டத்தில் உள்ளது அணைக்கரைபட்டி மற்றும் மெய்யானத்தம்பட்டி என்ற கிராமங்கள். உள்ளாட்சி தேர்தல் தொடர்பாக இந்த இரண்டு கிராமத்துக்கு இடையே முன் விரோதம் இருந்து வந்தது.
இந்த நிலையில் நேற்று இரவு இரண்டு கிராம மக்களும் மோதிக்கு கொண்டனர். இதில் 14 பேர் படுகாயம் அடைந்தனர். இந்த மோதலின் போது பல்வேறு வீடுகளுக்கு தீ வைக்கப்பட்டது. படுகாயம் அடைந்த அனைவரும் ராஜாஜி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இந்த மோதல் குறித்து தகவல் அறிந்த காவல்துறை உயர் அதிகாரிகள், காவல்படையுடன் நிகழ்விடத்துக்கு விரைந்து வந்தனர்.
மேலும் அங்கு பதற்றமாக இருப்பதால் மாவட்ட கண்காணிப்பாளர் டி.எஸ்.அன்பு தலைமையில் 200 காவலர்கள் குவிக்கப்பட்டுள்ளனர்.
இந்த மோதல் தொடர்பாக ஒருவரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து குற்றவாளிகளை தேடி வருகின்றனர்.