Publish Date: Sun, 30 Mar 2008 (10:58 IST)
Updated Date: Sun, 30 Mar 2008 (10:58 IST)
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அகில இந்திய மாநாட்டிற்கு முதல்வர் கருணாநிதி வாழ்த்துத் தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் விடுத்துள்ள வாழ்த்துச் செய்தியில், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் 19-வது அகில இந்திய மாநாடு கோவையில் நடப்பது மட்டற்ற மகிழ்ச்சி அளிக்கிறது. துவக்க விழாவில் மார்க்சிஸ்ட் பொதுச் செயலர் பிரகாஷ் காரத் துவக்க உரையாற்றுவதும், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி பொதுச் செயலர் ஏ.பி.பரதன் வாழ்த்துரை வழங்குவதும் மாநாட்டுக்கு பெருமை சேர்க்கக் கூடியது.
மாநாடு வெற்றி பெறவும், நல்ல பல தீர்மானங்களை வடித்தெடுக்கவும் மனதார வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன் எனக் குறிப்பிட்டுள்ளார்.