Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

ஒகேனக்கல்லில் கலகம் செய்ய வருபவர்கள் மீது நடவடிக்கை: தா.பாண்டியன்!

Advertiesment
ஒகேனக்கல்லில் கலகம் செய்ய வருபவர்கள் மீது நடவடிக்கை: தா.பாண்டியன்!
, சனி, 22 மார்ச் 2008 (10:43 IST)
ஒகேனக்கல்லில் கலகம் செய்ய வருபவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தமிழக, ம‌‌த்‌திஅரசுக்கு இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் மாநில செயலாளர் தா.பாண்டியன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

இது கு‌றி‌த்து அவ‌ர் வெளியிட்டுள்ள அறிக்கையில், கிருஷ்ணகிரி, தர்மபுரி மாவட்டங்களுக்கு குடிநீர் தருவதற்காக ஒகேனக்கல் கூட்டு குடிநீர் திட்டத்தை தமிழக அரசு அறிவி‌த்த‌தி‌லிரு‌ந்து கர்நாடக மாநிலத்தை சேர்ந்த பா.ஜனதா க‌ட்‌சி‌யினரும், கர்நாடக மாநிலக்கட்சிகளும், தமிழகத்திற்கு எதிரான இனவெறி முழக்கங்களை எழுப்பி வருகி‌ன்றன‌ர். மேலும் ஒகேனக்கல் பகுதிக்கே திரளாக வந்து ஆர்ப்பாட்டம் நடத்துவது‌ம் தொடர்கிறது.

தமிழக மக்களை ஆத்திரமடையச் செய்யும் இனவெறி முழக்கங்களை எழுப்பும் கும்பல், ஒகேனக்கல் தமிழ்நாட்டுப் பகுதிக்குள் இயங்கி வரும் படகுகளை துன்புறுத்தவும் செய்கின்றனர். மாநில மக்களுக்கிடையே கலவரங்களை தூண்டக்கூடிய வகையில் ஆர்ப்பாட்டம் செய்து வரும் தேச விரோத கும்பலை மத்திய அரசு தடு‌த்து ‌‌நிறு‌த்த வேண்டும்.

தமிழக அரசும், காவல்துறையும் ஒகேனக்கல்லில் நீராட வருகிறவர்கள் நீங்கலாக, கலகம் செய்ய வரும் கும்பல் மீது நடவடிக்கை எடுத்து தமிழக உரிமையை காத்திட முன்வர வேண்டும் எ‌ன்று தா‌.பா‌ண்‌டிய‌ன் கூ‌றியு‌ள்ளா‌ர்.

Share this Story:

Follow Webdunia tamil