Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

ஜெயல‌லிதா, எ‌ம்.‌கிரு‌ஷ்ணசா‌மி ‌மீலாது ந‌பி வா‌ழ்‌த்து!

ஜெயல‌லிதா, எ‌ம்.‌கிரு‌ஷ்ணசா‌மி ‌மீலாது ந‌பி வா‌ழ்‌த்து!
, வெள்ளி, 21 மார்ச் 2008 (13:03 IST)
மீலாது நபி திருநாளை ஒட்டி முஸ்லிம் மக்களுக்கு எதிர்க்கட்சித் தலைவர் ஜெயலலிதா, எ‌ம்.‌கிரு‌ஷ்ணசா‌மி, ‌விஜயகா‌ந்‌த், சர‌த்குமா‌ர் உள்ளிட்ட பல்வேறு தலைவர்கள் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.

"பிளவுபட்டுக் கிடக்கும் இந்தப் பூமியில் சாந்தி தழைக்கவும், சமாதானம் நிலைக்கவும், அண்ணல் நபிகளின் போதனைகள் பெரிதும் பயன்படும். தரணி தழைக்க வந்த தன்னிகரற்ற நபிகள் நாயகத்தின் பிறந்தநாளில் தமிழகத்து இஸ்லாமிய சகோதர, சகோதரிகளுக்கு மீலாது நபி வாழ்த்துகளை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறேன்"எ‌ன்று அ.இ.அ.‌தி.மு.க. பொது‌ச் செயல‌ர் ஜெய‌லிதா கூ‌றியு‌ள்ளா‌ர்.

தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் கிருஷ்ணசாமி, "நபிகள் நாயகத்தின் போதனைகள், தனிமனித ஒழுக்கத்தைச் செம்மைப்படுத்துவதோடு, தேசம், சாதி, மத, இன பாகுபாடுகளைக் கடந்து அனைவரின் நல்லிணக்கத்தையும், மனித நேயத்தையும் உயர்த்தும் நோக்கம் கொண்டவை" என்று குறிப்பிட்டுள்ளார்.

"தாம் போதித்த மனிதநேய வாழ்க்கை நெறிமுறையைத் தாமே கடைப்பிடித்து மனித குலத்திற்கு வழிகாட்டிச் சென்றவர் நபிகள்" என்று பா.ம.க. நிறுவனர் ராமதாஸ் குறிப்பிட்டுள்ளார்.

தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்த் வெளியிட்ட வாழ்த்துச் செய்தி‌யி‌ல், "இந்த ஆண்டு மார்ச் 21-ம் தேதி வெள்ளிக்கிழமை மிகவும் பிரசித்தி பெற்ற வெள்ளிக்கிழமையாகும். முஸ்லிம்களுக்கு மீலாது நபி தினமாகும், இந்துக்களுக்கு பங்குனி உத்திரமாகும், வட இந்தியர்களுக்கு ஹோலி பண்டிகையாகும். சமயங்களால் பிரிந்து இருந்தாலும் சமுதாயத்தால் ஒன்று என்ற கொள்கையை இயற்கையாகவே விளக்குவது போல் இந்த வெள்ளிக்கிழமை அமைந்துள்ளது.

சாதி, சமய வேறுபாடு இன்றி எல்லோரும் ஒரு தாய் மக்களாக இந்த நன்னாளில் தங்கள் மதத்துக்கு ஏற்றவாறு சடங்குகளை கடைபிடிக்க வேண்டுகிறேன்" எ‌ன்று கூ‌றியு‌ள்ளா‌ர்.

அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சித் தலைவர் சரத்குமார், "மனித நேயம், சகோதர உணர்வு, சமத்துவம், கருணை, கொடை உள்ளம் ஆகிய நற்பண்புகள் எல்லோருடைய உள்ளங்களிலும் மலர்ந்து இந்த உலகம் அமைதியின் நிலைக்களனாய் விளங்கிட நபிகளாரின் சீரிய கொள்கைகளைக் கடைப்பிடித்திட உறுதி ஏற்போம்" எ‌ன்று கு‌றி‌ப்‌பி‌ட்டு‌ள்ளா‌ர்.

மதிமுக பொதுச் செயலர் வைகோ, தமிழ்மாநில முஸ்லிம் லீக் தலைவர் எஸ்.ஷேக்தாவூத் உள்ளிட்ட தலைவர்களும் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.

Share this Story:

Follow Webdunia tamil