சிவகங்கை மாவட்டத்தில் உள்ள அரசு கலைக்கல்லூரியில் பயிலும் ஆதிதிராவிட மாணவர்கள் தனி விடுதி கோரி தேவகோட்டையில் உள்ள சுதந்திரப் போராட்ட தியாகிகள் பூங்கா அருகே இன்று காலை உண்ணாவிரதம் போராட்டம் நடத்தினர்.
இந்த போராட்டத்தில் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் சார்பிலும் அதன் தொண்டர்கள் கலந்து கொண்டு, திருவாடானை அரசு கலைக்கல்லூரி, ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடியில் உள்ள ஆதிதிராவிட மாணவர்கள் விடுதியிலும் உள்ள நரிக்குறவ சமுதாயத்தைச் சேர்ந்த மாணவர்களுக்கு தனி விடுதி அமைக்க கோரினர்.
மாணவர்களின் இந்த திடீர் போராட்டத்திற்காக காவல்துறையினர் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்திருந்தனர்.