Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

வரு‌ம் க‌ல்‌வியா‌ண்டு முத‌ல் பொ‌றி‌யிய‌ல், கலைக்கல்லூரிகளில் கிரேடு முறை!

வரு‌ம் க‌ல்‌வியா‌ண்டு முத‌ல் பொ‌றி‌யிய‌ல், கலைக்கல்லூரிகளில் கிரேடு முறை!
, வியாழன், 13 மார்ச் 2008 (11:07 IST)
''பொ‌றி‌யிய‌ல், கலை அறியல் கலைக்கல்லூரிகளில் மாணவர்கள் எடுக்கும் மார்க்குக்கு பதிலாக கிரேடு முறை அமல்படுத்தப்பட உள்ளது'' என்று உய‌ரக‌ல்‌வி‌த்துறஅமைச்சர் பொன்முடி கூ‌றியு‌ள்ளா‌ர்.

இதகு‌றி‌‌த்தஉயர் கல்வித்துறை அமைச்சர் பொன்முடி செ‌ய்‌தியாள‌ர்க‌ளிட‌மகூறுகை‌யி‌ல், பொ‌றி‌யி‌ய‌லபடித்தவர்களுக்கு மட்டுமல்லாமல் பி.ஏ., பி.எஸ்சி., பி.காம். படித்தவர்களுக்கும் வேலை கிடைக்க வேண்டும் என்ற எண்ணத்தில் புதிய திட்டங்களை அறிமுகப்படுத்த உள்ளோம். அந்தவகையில் சென்னையில் உள்ள அரசு கல்லூரிகள் அனைத்தையும் சேர்த்து அவை தொகுப்பு கல்லூரிகள் என்று அழைக்கப்படும். கட்டமைப்பு வசதிகள் எந்த கல்லூரியில் இருக்கிறதோ அதை மற்ற கல்லூரி மாணவர்கள் பயன்படுத்திக்கொள்ளலாம்.

இந்த கல்லூரிகளில் படிக்கும் மாணவர்கள் அவர்கள் படிக்கும் மெயின் (கோர் சப்ஜக்ட்) பாடம் தவிர விருப்பப்பாடங்கள் அவர்கள் படிக்கும் கல்லூரியில் இல்லாவிட்டாலும் தொகுப்பு கல்லூரியில் இருந்தால் அங்கு போய் (உரிய நேரத்தில்) படிக்கலாம். எவ்வாறு மாணவர்கள் படிக்க நேரம் ஒதுக்கலாம். எப்படி படிக்க வாய்ப்பு அளிக்கலாம் என்பது பற்றி பின்னர் அறிவிக்கப்படும். இப்படி விருப்ப பாடங்களை மாணவர்கள் படிப்பதால் அவர்களுக்கு எளிதில் வேலைவாய்ப்பு ஏற்படும்.

மேலும் புதிய திட்டமாக வருகிற கல்வி ஆண்டு முதல் கல்லூரிகளில் கிரேடு முறை அமல்படுத்தப்படும். அதாவது பொ‌றி‌யிய‌ல், அ‌றிவியல் கல்லூரிகளில் அனைத்தும் இந்த முறை அமல்படுத்தப்படும். முன்பு டிபிளஸ் கிரேடு என்பது தான் உயர்ந்த கிரேடு ஆகும். மதிப்பெண் எடுத்ததற்கு ஏற்றவகையில் கிரேடு வழங்கப்படும். உதாரணமாக 80 மார்க்கு முதல் 100 மார்க் வரை டிபிளஸ் கிரேடு, 60 முதல் 79 வரை ஒரு கிரேடாகும். 40 முதல் 59 வரை மற்றோரு கிரேடு ஆகும் எ‌ன்றஅமைச்சர் பொன்முடி தெரிவித்தார்.

Share this Story:

Follow Webdunia tamil