Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

தமிழக காவ‌ல் துறைக்கு 5,959 ஆண்- பெண் காவ‌ல‌ர்க‌ள் தேர்வு!

Advertiesment
தமிழக காவ‌ல் துறைக்கு 5,959 ஆண்- பெண் காவ‌ல‌ர்க‌ள் தேர்வு!
, வியாழன், 13 மார்ச் 2008 (10:21 IST)
தமிழக காவ‌ல்துறைக்கு 5,959 ஆண்-பெண் காவல‌ர்க‌ளபுதிதாக தேர்வு செய்யப்பட உள்ளனர். ஏப்ரல் 15ஆ‌மதேதிக்குள் விண்ணப்ப மனுக்களை அனுப்ப வேண்டும் என்று கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

இது தொடர்பாக, தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வாணையம் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், தமிழக காவ‌லதுறைக்கு இரண்டாம் நிலை ஆண் காவல‌ர் 4,171 பேரும், பெண் காவல‌ர் 1,788 பேரும் (மொத்தம் 5,959 பேர்) புதிதாக தேர்ந்தெடுக்கப்பட உள்ளனர்.

இது தொடர்பான அறிக்கை ஏற்கனவே பத்திரிகைகளில் வெளியிடப்பட்டுள்ளது. மாதிரி விண்ணப்ப படிவம், விண்ணப்பதாரர்களின் தகுதிகள் குறித்த தகவல்களும் இன்டர்நெட்டில் வெளியிடப்பட்டுள்ளது. www.tn.gov.in/tnusrb என்ற இணையதள முகவரியில் பார்த்து தெரிந்து கொள்ளலாம்.

தகுதியான விண்ணப்பதாரர்கள் விண்ணப்ப படிவத்தை சரியாக பூர்த்தி செய்து புகைப்படம் மற்றும் ரூ.150-க்கான வங்கி `டிராப்ட்'டையும் அனுப்பி வைக்க வேண்டும்.

ஏப்ரல் 15ஆ‌மதேதிக்குள் விண்ணப்ப மனுக்கள் வந்து சேரும்படி அனுப்பி வைக்க வேண்டும். விண்ணப்ப மனுக்களை தலைவர், தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வாணையம், நம்பர்: 807, 2-வது தளம், அண்ணா சாலை, சென்னை-600 002 என்ற முகவரிக்கு அனுப்பி வைக்கவும் எ‌ன்றகூற‌ப்ப‌ட்டு‌ள்ளது.

Share this Story:

Follow Webdunia tamil