Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

சத்தி- சாம்ராஜ்நகர் ரயில் திட்ட‌ம் : 15இல் போரா‌ட்ட‌ம்!

ஈரோடு செ‌ய்‌தியாள‌ர்

சத்தி- சாம்ராஜ்நகர் ரயில் திட்ட‌ம் : 15இல் போரா‌ட்ட‌ம்!
, திங்கள், 10 மார்ச் 2008 (15:51 IST)
சத்தி- சாம்ராஜ்நகர் ரயில் திட்டத்தை நிறைவேற்ற கோரி சத்தியமங்கலத்தில் வரும் 15 ம் தேதி சனிக்கிழமை முழு கடையடைப்பு மற்றும் உண்ணாவிரத போராட்டம் நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.

கடந்த பாராளுமன்ற தேர்தலில் கோபி பாராளுமன்ற தொகுதியில் போட்டியிட்ட தற்போதைய மத்திய இணை அமைச்சர் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் சத்தி- சாம்ராஜ்நகர் ரயில்திட்டத்தை நிறைவேற்றி தருவதாக தேர்தல் வாக்குறுதி கொடுத்தார்.

வெற்றிபெற்ற சில மாதங்களில் சத்தி- சாம்ராஜ்நகர் ரயில் திட்டத்திற்கான ஆய்வு பணி தொடக்கவிழா பண்ணாரியில் கோலாகலமாக நடந்தது. மத்திய இரயில்வே இணை அமைச்சர் வேலு உட்பட நான்கு அமைச்சர்கள் கலந்துகொண்ட இந்த விழாவின் ஆடம்பரத்தால் சத்தியமங்கலத்திற்கு ரயில் வந்துவிட்டதாகவே இப்பகுதி மக்கள் மகிழ்ந்தனர்.

ஆய்வு பணி தொடங்கியவுடன் தமிழக வனப்பகுதியை சேர்ந்த 53 கி.மீ., தõரம் ஆய்வு பணியை நடத்தவே தமிழக வனத்துறை அனுமதி தரவில்லை. இதுதவிர வனஆர்வாளர்கள் இந்த வழியாக ரயில்பாதை சென்றால் யானை உள்ளிட்ட வனவிலங்குகளுக்கு பெரும் ஆபத்து ஏற்படும் என வழக்கும் தொடர்ந்தனர்.

இந்த ஆய்வு பணி தொய்வடைந்தது. இதற்கு மாநிலத்தில் உள்ள அ.தி.மு.க., ஆட்சியே காரணம் என மத்திய இணை அமைச்சர் ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் குற்றம்சாட்டினார். இதற்கு முன்னாள் அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் மறுத்தார். இதற்கு மத்திய இணை அமைச்சர் ஒரேமேடையில் இது குறித்து விவாதிக்க தயாரா என செங்கோட்டையனுக்கு சவால் விட்டார்.

இந்த நிலையில் தமிழகத்தில் ஆட்சி மாற்றம் ஏற்பட்ட காங்கிரஸ் ஆரவுடன் தி.மு.க., பதவியேற்றது. இதனால் கட்டாயம் சத்தி- சாம்ராஜ்நகர் ரயில் திட்டம் நிறைவேறிவிடும் என இப்பகுதி மக்களுக்கு நம்பிக்கை ஏற்பட்டது. ஆனால் தொடர்ந்து இந்த திட்டம் கிணற்றில்போட்ட கல்லாய் இருந்தது.

இந்த நிலையில் உச்சநீதிமன்றம் இது குறித்து உண்மை நிலை அறிந்துவர மத்திய குழு ஒன்றை நியமித்தது. இந்த குழுவும் சர்சøறிய 53 கி.மீ., சத்தியமங்கலம் வனப்பகுதியை பார்வையிட்டு சென்றனர். கடந்த இரண்டு மாதங்களுக்கு முன் ஆசனõர் வந்த மாநில வனத்துறை அமைச்சர் செல்வராஜ் ஆய்வு பணிக்கு அனுமதி வழங்கப்பட்டதாக தெரிவித்தார்.

அதே சமயம் தற்போதைய கோபி எம்.எல்.ஏ., செங்கோட்டையன் இளங்கோவன் பொம்மை ரயில்தான் விடுவார். உண்மையான ரயில் வராது என்று கிண்டலடித்தார்.

மத்தியில் காங்கிரஸ் அரசும், மாநிலத்தில் அதன் கூட்டணி அரசான தி.மு.க., அரசு இருந்தும் இந்த திட்டம் தொடர்ந்து தாமதமாவதற்கு காரணம் தெரியாமல் இப்பகுதி மக்கள் இருக்கின்றனர். இந்த நிலையில் சத்தி- சாம்ராஜ்நகர் ரயில் வேண்டுவோர் மக்கள் கூட்டமைப்பு சார்பாக கடந்த மாதம் 25 ம் தேதி ஊர்வலம் நடத்தினர்.

அடுத்த கட்ட போராட்டம் குறித்து நேற்று சத்தி நகராட்சி அலுவலகத்தில் ஆலோசனை கூட்டம் நடந்தது. நகரமன்ற தலைவர் வேலுசாமி தலைமையில் நடந்த இந்த கூட்டத்தில் கலந்துகொண்ட அனைவரையும் சாம்ராஜ்நகர்- சத்தி ரயில் வேண்டுவோர் மக்கள் கூட்டமைப்பு செயலாளர் ஆடிட்டர் மயில்சாமி வரவேற்றார்.

கூட்டத்தில் சர்வ கட்சி மற்றும் வியாபார அமைப்பினர் கலந்துகொண்டு தங்கள் கருத்துக்களை தெரிவித்தனர். முடிவில் சத்தி- சாம்ராஜ்நகர் ரயில் திட்டத்தை விரைவில் நிறைவேற்ற கோரி இம்மாதம் 15 ம் தேதி சனிக்கிழமை சத்தியமங்கலத்தில் முழு கடையடைப்பு நடத்துவது என்றும் அன்றே சுமார் ஐந்தாயிரம் மக்களுக்கு மேல் கலந்துகொள்ளும் உண்ணாவிரத போராட்டம் நடத்தவும் முடிவு செய்யப்பட்டுள்ளது.

சத்தியமங்கலம் தாலுக்கா அலுவலகம் முன் நடக்கும் இந்த உண்ணாவிரத்ததில் மத்திய இணை அமைச்சர் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன், மாநில கைத்தறி துறை அமைச்சர் என்.கே.கே.பி. ராஜா மற்றும் எம்.எல்.ஏ., க்கள் தர்மலிங்கம், சுப்பிரமணியம், பழனிசாமி, விடியல்சேகர் உள்ளிட்டோரும் கலந்துகொள்வார்கள் என கூட்டமைப்பு செயலாளர் ஆடிட்டர் மயில்சாமி தெரிவித்தார்.

மேலும் உடனே பத்தாயிரம் பேர் கையெழுத்திட்ட கோரிக்கை மனு தயார் செய்து முதல்வருக்கு அனுப்புவது என்றும் அடுத்தகட்ட போராட்டமாக சத்தியில் இருந்த ஈரோடு வரை நடைபயணம் செல்வது என்றும் முடிவெடுக்கப்பட்டுள்ளது.

Share this Story:

Follow Webdunia tamil