Publish Date: Sat, 08 Mar 2008 (13:54 IST)
Updated Date: Sat, 08 Mar 2008 (13:54 IST)
அருந்ததியினருக்கு இட ஒதுக்கீடு வழங்குவது குறித்து ஆலோசனை நடத்த முதல்வர் கருணாநிதி தலைமையில் மார்ச் 12ஆம் தேதி அனைத்து கட்சி கூட்டம் நடைபெறுகிறது.
இது குறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், அருந்ததியர் வகுப்பினர் சமூகப் பொருளாதார நிலையில் அடித்தளத்தில் இருப்பதால் அவர் தம் முன்னேற்றத்திற்குச் சிறப்புச் சலுகைகள் அளிப்பது அவசியம் எனக் கருதி தற்போது ஆதிதிராவிடருக்கு வழங்கப்பட்டு வரும் இட ஒதுக்கீட்டில் அருந்ததியர் வகுப்பினருக்கு தனி உள் ஒதுக்கீடு வழங்குவது குறித்து தமிழக அரசு அனைத்துக் கட்சிகளையும் கலந்து ஆலோசித்து முடிவு செய்யும் என்று 23.1.2008 அன்று பேரவையில் ஆளுநர் உரையில் அறிவிக்கப்பட்டது.
அந்த அறிவிப்பின்படி, தமிழக முதலமைச்சர் கருணாநிதி தலைமையில் மார்ச் 12ஆம் மாலை 4.30 மணிக்கு தலைமைச் செயலகம்-அமைச்சரவை அரங்கில் அனைத்துக் கட்சித் தலைவர்களின் கூட்டம் நடைபெற உள்ளது. அக் கூட்டத்தில் கலந்து கொண்டு கருத்துரைகள் வழங்குமாறு கேட்டுக்கொண்டு அனைத் துக்கட்சிகளின் தலைவர்களுக்கும் கடிதங்கள் அனுப்பப்பட்டுள்ளன என்று தமிழக அரசு அறிவித்துள்ளது.
Webdunia
Publish Date: Sat, 08 Mar 2008 (13:54 IST)
Updated Date: Sat, 08 Mar 2008 (13:54 IST)