''பொறியியல் கவுன்சிலிங் கடந்த ஆண்டைப்போல ஒரே இடத்தில் தான் நடக்கும்'' என்று உயர் கல்வித்துறை அமைச்சர் பொன்முடி அறிவித்துள்ளார்.
சென்னையில் செய்தியாளர்களிடம் அமைச்சர் பொன்முடி கூறுகையில், பொறியியல் கல்லூரிகளில் மாணவர்களிடம் கூடுதல் கட்டணம் வசூலித்தால், அதுபற்றி மாணவர்கள் புகார் தெரிவித்தால் அது குறித்து விசாரித்து உண்மை என்று தெரிந்தால் சம்பந்தப்பட்ட கல்லூரி மீது நடவடிக்கை எடுக்கப்படும்.
காலியாக கிடந்த கல்லூரி ஆசிரியர்கள் பணியிடங்கள் நிரப்பப்படுகின்றன. நியமிக்கப்பட்ட புதிதாக நியமிக்கப்பட்ட கல்லூரி ஆசிரியர்களுக்கு பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது. அவர்களுக்கு பயிற்சி காலத்திலேயே சம்பளம் வழங்கப்படுகிறது. உயர்கல்வியில் அதிக மாணவர்கள் மட்டும் பயின்றால் போதாது, அவர்களின் கல்வித்தரமும் உயரவேண்டும். அதற்கு அரசு அனைத்து முயற்சிகளும் எடுத்து வருகிறது.
இந்த ஆண்டும் கடந்த ஆண்டே போல ஒரே இடத்தில் தான் பொறியியல் கவுன்சிலிங் நடக்கும். இதுதான் மாணவர்களுக்கு நல்லது. மாணவர்சேர்க்கை சிறப்பாக நடக்க அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டு வருகிறது என்று அமைச்சர் பொன்முடி கூறினார்.