Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

தி.மு.க. அரசைக் கண்டித்து நல்லூரில் ஆர்ப்பாட்டம்: ஜெயலலிதா!

தி.மு.க. அரசைக் கண்டித்து நல்லூரில் ஆர்ப்பாட்டம்: ஜெயலலிதா!
, புதன், 5 மார்ச் 2008 (19:02 IST)
முறையாகுடிநீரவிநியோகிக்காநல்லூர் நகராட்சியையும், ி.ு.க. அரசையுமகண்டித்தநாளஅங்கஆர்ப்பாட்டமநடத்தப்படுமஎன்று அ.இ.அ.ி.ு.க. பொதுச்செயலரஜெயலலிதஅறிவித்துள்ளார்.

இதுகுறித்தஅவரவெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:

கோவை புறநகர் வடக்கு மாவட்டம், திருப்பூர் சட்டமன்றத் தொகுதிக்கு உட்பட்ட நல்லூர் நகராட்சியில் போதுமான அளவு மேல்நிலைத் தொட்டிகள் இல்லாததால், போதிய அளவு தண்ணீர் வசதி இருந்தும், குடிநீர் இணைப்பு கேட்டு விண்ணப்பித்தவர்களுக்குக் குடிநீர் வழங்குவதில் தாமதம் ஏற்பட்டு வருகிறது. இணைப்பு வழங்கப்பட்ட வீடுகளுக்கும் முறையாகத் தண்ணீர் வழங்கப்படுவதில்லை. இதனால் குடிநீருக்காக மக்கள் அலையும் அவலநிலை ஏற்பட்டுள்ளது. தேங்கிக் கிடக்கும் கழிவு நீர், அகற்றப்படாத குப்பைகள், எரியாத தெருவிளக்குகள் ஆகியவைகள் பற்றியும் நல்லூர் மக்களிடத்தில் இருந்து தொடர்ந்து புகார்கள் வந்த வண்ணம் உள்ளன.

நல்லூர் நகர மக்களுக்கு குடிநீர், மற்ற அடிப்படை வசதிகளைச் செய்து தராத, நகராட்சி நிர்வாகத்தைக் கண்டித்தும் மக்களின் தேவைகளை நிறைவேற்றத் தவறிய தி.மு.க. அரசைக் கண்டித்தும், கோவை புறநகர் வடக்கு மாவட்டக் கழகத்தின் சார்பில் நாளை (6-மதேதி) காலை 10 மணி அளவில் நல்லூர் நகராட்சி அலுவலகம் முன்பு கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும்.

இதற்கு கழகத் தலைமை நிலையச் செயலர் செங்கோட்டையன் எம்.எல்.ஏ. தலைமை தாங்குகிறார். கோவை புறநகர் வடக்கு மாவட்டக் கழகச் செயலர் திருப்பூர் சி.சிவசாமி முன்னிலை வகிக்கிறார். இவ்வாறு அறிக்கையிலகூறப்பட்டுள்ளது.

Share this Story:

Follow Webdunia tamil