Publish Date: Sun, 02 Mar 2008 (16:42 IST)
Updated Date: Sun, 02 Mar 2008 (16:42 IST)
தமிழில் பல்வேறு நாவல்கள், சிறுகதைகள் எழுதிய சிறந்த எழுத்தாளர் ஸ்டெல்லா புரூஸ் என்கிற ராம்மோகன் இன்று தற்கொலை செய்து கொண்டார்.
சென்னையில் உள்ள அவரது வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட ஸ்டெல்லா புரூஸின் வயது 67.
ராம் மோகன் என்ற இயற்பெயர் கொண்டவர் ஸ்டெல்லா புரூஸ் என்ற புனைப் பெயரில் சிறுகதைகள், நாவல்களை எழுதியுள்ளார். இவரது எழுத்துக்களில் இருந்த இயல்பும், இளமையும் தமிழ் மக்களை வெகுவாக கவர்ந்தது.
கோடம்பாக்கம் யுனைடட் இந்தியா காலனியில் வசித்து வந்த ஸ்டெல்லா புரூஸின் மனைவி சமீபத்தில் இறந்துவிட்டதாகவும், அந்த சோகமும், வறுமையும் அவரை வாட்டியதால், மனமுடைந்த ஸ்டெல்லா புரூஸ் நேற்றிரவு தனது வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்
'எல்லா சாலைகளும் குற்றங்களை நோக்கி', 'அது ஒரு கனாக்காலம்' போன்ற நாவல்கள் மூலம் தமிழ் ரசிகர்களின் மனங்களை ஸ்டெல்லா புரூஸ் கொள்ளை கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது.