பெட்ரோல், டீசல் விலை உயர்வை கண்டித்து விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் மதுரை அண்ணா பேருந்து நிலையம் அருகில் இன்று கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது.
இந்த ஆர்ப்பாட்டத்திற்கு கே. கலைவாணன் தலைமை தாங்கினார். அப்போது, பெட்ரோல், டீசல் விலை உயர்வை மத்திய அரசு உடனடியாக வாபஸ் பெற வேண்டும் என்று முழக்கமிட்டனர்.
மேலும், முல்லைப் பெரியார் அணை பிரச்சினையில் உச்ச நீதிமன்ற தீர்ப்பை அமல் படுத்த மறுக்கும் கேரளாவுக்கு அத்தியாவசிய பொருட்கள் அனுப்புவதை தடைசெய்வது, நெடுந்தீவு, கச்சத்தீவு கடல் பகுதியில் மிதக்க விட்டுள்ள கன்னி வெடிகளை அகற்ற மத்திய அரசு இலங்கை அரசை வலியுறுத்த வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தினர்.