''நடப்பாண்டிற்கான இரயில்வே பட்ஜெட்டில் தமிழகத்துக்கு 4 புதிய திட்டங்களையும், அகலப்பாதையாக மாற்றும் திட்டத்திற்கும் அனுமதி வழங்க வேண்டும்'' என்று பிரதமர் மன்மோகன் சிங்கை முதலமைச்சர் கருணாநிதி வலியுறுத்தியுள்ளார்.
பிரதமர் மன்மோகன் சிங்குக்கு அவர் இன்று எழுதியுள்ள கடிதத்தில், எண்ணூர் துறைமுகத்திலிருந்து புத்தூர் வரை சரக்குப் போக்குவரத்துக்கெனத் தனியே புதிய இரயில் பாதை, ஈரோடு நகரத்தையும், பழனி நகரத்தையும் இணைக்கும் புதிய இரயில் பாதை, சென்னையிலிருந்து மாமல்லபுரம் புதுச்சேரி வழியாக கடலூருக்குப் புதிய இரயில் பாதை.
மதுரையிலிருந்து போடி நாயக்கனூர் வரை மீட்டர் கேஜ் இரயில் பாதையை அகல ரயில் பாதையாக மாற்றியமைத்தல், விழுப்புரத்திலிருந்து திண்டுக்கல் வரை மற்றொரு புதிய இரயில் பாதை ஆகிய திட்டங்களுக்கு ஒப்புதல் அளித்து வரஇருக்கும் மத்திய இரயில்வே பட்ஜெட்டில் அறிவித்திட வேண்டுமென்று கடித்தில் வலியுறுத்தியுள்ளார்.