''தமிழகத்தில் சமச்சீர் கல்வி முறையை விரைவாக அமல்படுத்த வேண்டும்'' என்று தமிழக காங்கிரஸ் கட்சி தலைவர் கிருஷ்ணசாமி தமிழக அரசை வலியுறுத்தியுள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழக அரசு பள்ளிகளில் பத்தாம் வகுப்பு வரை தமிழை கட்டாய பாடமாக்கி சட்டம் இயற்றியது. உச்ச நீதிமன்றமும் இதனை உறுதிப்படுத்தி தீர்ப்பளித்துள்ளது.
இதுவரை, இரண்டாம் பாடமாக ஆங்கிலம், ஜெர்மன், சமஸ்கிருதம், இந்தி உள்ளிட்ட ஏதாவது ஒரு மொழியை மட்டும் படிக்கும் சூழல் இருந்த நிலை மாறி அனைத்து மாணவர்களும் தமிழை கட்டாயமாக படிக்கும் நிலை உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
இதனால் தமிழக அரசு அறிவித்துள்ள சமச்சீர் கல்வி முறையை விரைந்து அமல்படுத்த வேண்டும் என்று அவர் கூறியுள்ளார்.