Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

சத்தியமங்கலம் மலைப்பகுதியில் குழந்தைகள் திருமணம்

ஈரோடு செ‌ய்‌தியாள‌ர்

சத்தியமங்கலம் மலைப்பகுதியில் குழந்தைகள் திருமணம்
, வியாழன், 21 பிப்ரவரி 2008 (11:54 IST)
தகவல் தொழில்நுட்பத்தில் வேகமாக முன்னேறிக்கொண்டுள்ள நிலையில் ஈரோடு மாவட்டம் தாளவாடி மலைப்பகுதியில் இன்னும் குழந்தைகள் திருமணம் அதிகமாக நடப்பது வேதனையளிக்கிறது.

கடந்த பத்து வருடங்களில் உலக நாடுகளில் இந்தியா வியக்கதக்க வகையில் முன்னேற்றம் அடைந்து வருகிறது. தகவல் தொழில்நுட்பம், தொழி‌ற்சாலைகள் உள்ளிட்ட அனைத்து துறைகளிலும் நல்ல முறையில் முன்னேறி வருகிறது. அதே சமயத்தில் பெண்கள் கல்வியில் பெரிதும் மாற்றம் ஏற்பட்டுள்ளது.

கணனி துறையில் இன்று பெண்கள் பங்கு அதிகமாக உள்ளது. வெளிநாடு சென்று பணிபுரியும் பெண்களின் எண்ணிக்கையும் வேகமாக உயர்ந்துகொண்டு வருகிறது. இதுதவிர அரசியலிலும் பெண்கள் புகுந்துள்ளனர். நகர்பகுதி மட்டுமின்றி கிராம பகுதிகளிலும் பெண்களின் முன்னேற்றம் வியப்படைய வைக்கிறது. உள்ளாட்சி அமைப்புகளில் பெணகள் அதிகளிவில் காணப்படுகின்றனர்.

மகளிர் சுய உதவிக் குழுக்களின் மூலம் ஆண்களுக்கு நிகராக பெண்கள் தொழில்துறையில் வெற்றிபெற்று வருவது பெருமைகொள்ள வைக்கிறது. ஒருபுறம் இப்படியிருக்க மற்றொறு புறத்தில் பெண் குழந்தைக்கு பத்து வயதில் திருமணம் செய்து வைக்கும் பழக்கம் தொடர்ந்து நடந்து வருகிறது.
பெண்களுக்கு 21 வயதுக்கு மேல் திருமணம் செய்தால் அவர்கள் மனரீதியாகவும், உடல் ரீதியாகவும் திருமண வாழ்க்கைக்கு தயாராக இருப்பார்கள் என மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர். ஆனால் ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் மலைப்பகுதியில் உள்ள தாளவாடியை சுற்றியுள்ள ூற்றுக்கணக்கான கிராமங்களில் இன்றும் குழந்தைகள் திருமணம் வேகமாக நடந்து வருகிறது.

webdunia photoWD
இந்த மலைப்பகுதியில் தங்கள் பெண் குழந்தைக்கு ஏழு வயது முதல் பனிரெண்டு வயதுக்குள் திருமணம் செய்து வைத்து விடுகின்றனர். திருமணம் என்றால் என்ன? என்று தெரியாத, அறியாத வயதில் இந்த பெண் குழந்தைகளுக்கு திருமணம் நடத்தி வைப்பது இப்பகுதி மக்களின் வாடிக்கையாகிவிட்டது.
பெண்ணின் முறைமாப்பிளை அதாவது அத்தை, மாமன் மகன்களுக்கு உறவு திருமணம் குழந்தையிலேயே நடத்தி முடித்து விடுகின்றனர். இது குறித்து சம்பந்தப்பட்ட குழந்தைகளின் பெற்றோரிடம் கேட்டபோது அவர்கள் கூறியது:

நாங்கள் எல்லாம் கிராமப்புறத்தில் வசித்து வருகிறோ‌ம். எங்களுக்கு சொந்தங்கள் முக்கியம். எங்கள் பெண்குழந்தையோ அல்லது ஆண் குழந்தையோ இருபது வயதுக்கு மேல் ஆகி யாராவது வேறு பெண்ணையோ அல்லது ஆணையோ காதலித்து திருமணம் செய்துவிட்டால் சொந்தங்களின் உறவு அறுந்துபோகும். ஆகவேதான் அவர்களுக்கு திருமணம் குறித்த விவரம் தெரியும் முன்னே அவர்களின் முறைமாப்பிளைக்கோ அல்லது முறை பெண்ணிற்கோ திருமணம் நடத்தி வைத்து விடுகிறோம் என்கின்றனர்.

Share this Story:

Follow Webdunia tamil