கரூர் மாவட்டம் குளித்தலையில் ம.தி.மு.க.வினர் மீது தி.மு.க.வினர் நடத்திய தாக்குதல் சம்பவம் தொடர்பாக நடவடிக்கை கோரி ஆளுநர் சுர்ஜித் சிங் பர்னாலாவிடம் அக்கட்சியின் பொதுச்செயலாளர் வைகோ இன்று புகார் மனு கொடுத்தார்.
இந்த தாக்குதல் சம்பவத்தில் காவல் துறையினர் உரிய நடவடிக்கை எடுக்கவில்லை என்றும், ஆளுநர் தலையிட்டு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தியும் ஆளுநர் மாளிகையில் ஆளுநர் பர்னாலாவை நேரில் சந்தித்து இந்த புகார் மனுவை அவர் கொடுத்துள்ளார்.
இந்த நிலையில் தாக்குதல் சம்பவத்தில் ஈடுபட்ட குளித்தலை தொகுதி தி.மு.க. சட்டமன்ற உறுப்பினர் மாணிக்கம் உள்பட 9 பேரை நேற்று நள்ளிரவு கைது செய்ததாக காவல் துறையினர் தெரிவித்துள்ளனர்.