மணப்பாறை அருகே நடந்த ஜல்லிக்கட்டு போட்டியில் காளைகள் முட்டி 57 பேர் காயம் அடைந்தனர். இதில் பலத்த காயம் அடைந்த 15 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
பொங்கல் பண்டிகையையொட்டி தமிழகம் முழுவதும் பல்வேறு இடங்களில் ஜல்லிக்கட்டு போட்டி நடந்து வருகிறது. திருச்சி மாவட்டம் மணப்பாறை அருகே உள்ள கருங்குளம் என்ற கிராமத்தில் நேற்று ஜல்லிக்கட்டு போட்டி நடந்தது.
இதில், காளைகள் முட்டி 57 பேர் காயம் அடைந்தனர். இவர்களில் 15 பேர் பலத்த காயம் அடைந்தனர். அவர்கள் உடனடியாக மணப்பாறை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. மற்றவர்கள் அங்கு அமைக்கப்பட்டிருந்த மருத்துவ முகாமில் சிகிச்சை அளிக்கப்பட்டது. அவர்கள் சிகிச்சைக்கு பின்னர் வீடு திரும்பினர்.