அ.இ.அ.தி.மு.க. பொதுச் செயலாளரும், தமிழக சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவருமான ஜெயலலிதா இன்று சட்டப் பேரவை வளாகத்திற்கு வருகை தந்து சட்டப் பேரவை உறுப்பினர்களுக்கான வருகைப்பதிவேட்டில் கையெழுத்திட்டு விட்டு சென்றார்.
இந்த ஆண்டுக்கான முதல் சட்டமன்ற கூட்டத் தொடர் இன்று துவங்கியது. இன்று காலை 9.17 மணியளவில் தலைமைச் செயலகத்துக்கு ஜெயலலிதா வந்தார். அவரை அ.இ.அ.தி.மு.க. உறுப்பினர்கள் வரவேற்றனர்.
நேராக சட்டமன்ற வளாகத்திற்குள் சென்ற ஜெயலலிதா அங்குள்ள வருகைப் பதிவேட்டில் கையெழுத்திட்டார். சில நிமிடங்கள் அங்கு நின்ற அவர், சட்டப் பேரவை நிகழ்ச்சியில் கலந்து கொள்ளாமல் சென்று விட்டார்.