Publish Date: Mon, 21 Jan 2008 (13:52 IST)
Updated Date: Mon, 21 Jan 2008 (13:52 IST)
சொத்து தகராறில் உடன் பிறந்த தம்பியை அடித்துக் கொன்ற அண்ணனை காவல்துறையினர் கைது செய்தனர்.
சென்னை அசோக்நகரில் வசித்து வந்தவர் தங்கராஜ். இவரது அண்ணன் கோவிந்தராஜ், கார் ஓட்டுனராக உள்ளார். 3 மாதங்களுக்கு முன்புதான் தங்கராஜிக்கு திருமணம் நடந்தது. இவரும் ஒரே வீட்டில் கூட்டு குடும்பமாக வசித்து வந்தனர்.
இந்த நிலையில் அண்ணன், தம்பி இருவருக்கும் சொத்து தகராறு ஏற்பட்டது. சம்பவத்தன்று சொத்தில் பங்கு கேட்டுள்ளார் தங்கராஜ். இதனால் ஆத்திரம் அடைந்த கோவிந்தராஜ், தங்கராஜின் தலையில் பலமாக அடித்துள்ளார்.
இதில் பலத்த காயம் அடைந்த தங்கராஜ், சென்னை அரசு பொது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். அங்கு சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்தார்.
இது குறித்து காவல்துறையினர் கோவிந்தராஜ் மீது கொலை வழக்குப் பதிவு செய்து அவரை கைது செய்தனர்.