அ.இ.அ.தி.மு.க.வின் தலைமைச் செயற்குழு உறுப்பினர்களாக அக்கட்சியின் கர்நாடக மாநிலப் பொறுப்பாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.
இது தொடர்பாக அக்கட்சியின் பொது செயலர் ஜெயலலிதா வெளியிட்டுள்ள அறிக்கையில், கர்நாடக மாநில அ.இ.அ.தி.மு.க. இணை செயலாளர் முனிசாமி, கர்நாடக அவைத் தலைவர் சிவசண்முகம், பொருளாளர் மூர்த்தி, கர்நாடக மாநில மகளிர் அணி செயலாளர் எல்லம்மா ஆகியோர் இன்று முதல் அ.இ.அ.தி.மு.க. தலைமை செயற்குழு உறுப்பினர்கள் பொறுப்பில் நியமிக்கப்படுகிறார்கள்.
கட்சியினர் இவர்களுக்கு முழு ஒத்துழைப்பு நல்கிட கேட்டுக் கொள்கிறேன் என்று கூறியுள்ளார்.