Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

த‌மிழக ‌மீனவ‌ர்க‌‌ள் ‌மீது து‌ப்பா‌க்‌கி‌ச் சூடு: ஜெயல‌லிதா க‌ண்டன‌ம்!

த‌மிழக ‌மீனவ‌ர்க‌‌ள் ‌மீது து‌ப்பா‌க்‌கி‌ச் சூடு: ஜெயல‌லிதா க‌ண்டன‌ம்!
, ஞாயிறு, 13 ஜனவரி 2008 (16:34 IST)
த‌மிழக ‌மீனவ‌ர்க‌ளி‌ன் ‌மீது இல‌ங்கை‌க் கட‌ற்படை‌யின‌ர் நட‌த்‌தியு‌ள்ள து‌ப்பா‌க்‌கி‌ச் சூ‌ட்டி‌ற்கு அ.இ.அ.‌தி.மு.க. பொது‌ச் செயல‌ர் ஜெயல‌லிதா க‌ண்டன‌ம் தெ‌ரி‌வி‌த்து‌ள்ளா‌ர்.

இதுகு‌றி‌த்து அவ‌ர் வெ‌ளி‌யி‌ட்டு‌ள்ள அ‌றி‌க்கை‌யி‌ல், "ராமேஸ்வரத்தில் இருந்து மீனவர்கள் மீன் துறை அதிகாரிகளிடம் முறையாக அனுமதி பெற்று கடலுக்குள் மீன் பிடிக்க சென்றுள்ளனர். அவர்கள் தனுஷ்கோடி அருகே நடுக்கடலில் மீன் பிடித்துக்கொண்டிருந்த போது சுமார் 25-க்கும் மேற்பட்ட இலங்கை கடற்படையினர் அவர்களை சுற்றி வளைத்து திடீரென அவர்கள் மீது துப்பாக்கி சூடு நடத்தியுள்ளனர்.

இத்திடீர் தாக்குதலை சற்றும் எதிர்பாராத மீன்வர்கள் செய்வதறியாது தவித்த போது ராமேஸ்வரத்தை சேர்ந்த மீனவர் சேகர் என்பவரின் வலது தோள் பட்டையில் துப்பாக்கி குண்டு பாய்ந்திருக்கிறது. இதனால் அவர் வலி பொறுக்க முடியாமல் சம்பவ இடத்திலேயே மயங்கி விழுந்திருக்கிறார். இதை அறிந்து படகில் இருந்தவர்கள் சிகிச்சை அளிப்பதற்காக ராமேஸ்வரம் துறைமுக பகுதிக்கு விரைந்து வந்திருக்கிறார்கள். இச்சம்பவத்தால் ராமேஸ்வரத்தில் பெரும் பத‌ற்றம் நிலவி வருகிறது.

இத்தகைய தொடர் தாக்குதலில் ஈடுபட்டு மீனவர்களின் வாழ்வாதாரத்தையே சிதைக்கும் இலங்கை கடற்படையினரின் செயலை நாம் ஒரு போதும் அனுமதிக்க முடியாது. இத்தகைய கோழைத் தனமான தாக்குதலுக்கு எனது கடுமையான கண்டனத்தை தெரிவித்துக் கொள்கிறேன். இது போன்ற தாக்குதல்கள் தமிழக மீனவர்கள் மீது இலங்கை கடற்படையினரால் தொட‌ர்‌ந்து நடத்தப்பட்டு வருகின்றன. மத்திய அரசும், தி.மு.க. அரசும் மீனவர்கள் நலனில் அக்கறை கொண்டு உடனடியாக இது போன்ற சம்பவங்களுக்கு முற்றுப்புள்ளி வைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன்.

துப்பாக்கி சூட்டில் காயம் அடைந்த மீனவர் சேகர் பூரண நலமுடன் வீடு திரும்ப எல்லாம் வல்ல இறைவனை பிரார்த்திக்கிறேன்." எ‌ன்று கூ‌றியு‌ள்ளா‌ர்.

Share this Story:

Follow Webdunia tamil