Publish Date: Fri, 11 Jan 2008 (18:01 IST)
Updated Date: Fri, 11 Jan 2008 (18:00 IST)
திருச்சி, பெரம்பலூர் மாவட்டங்களில் நேற்று இரவு நடந்த 4 சாலை விபத்தில் 2 பெண்கள் உள்பட 6 பலியாயினர்.
திருச்சி- சென்னை தேசிய நெடுஞ்சாலையில் நேற்று இரவு ஸ்ரீபெரும்புதூரில் இருந்து தென்காசிக்கு வந்து கொண்டிருந்த காரும், அரசு பேருந்தும் நேருக்கு நேர் மோதிய விபத்தில் ஒரு பெண் உள்பட 2 பேர் நிகழ்விடத்திலேயே உயிரிழந்தனர். 5 பேர் படுகாயம் அடைந்தனர். அவர்கள் அனைவரும் திருச்சி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
பழனியில் இருந்து சென்னை கிழக்கு தாம்பரத்திற்கு நேற்று இரவு பெரம்பலூர் மாவட்டம், மங்களமேடு அருகே திருச்சி- சென்னை தேசிய நெடுஞ்சாலையில் கார் வந்து கொண்டிருந்த போது எதிரே வந்த லாரி மோதி விபத்துள்ளானது. இதில் ஒரு பெண் உள்பட 2 பேர் பலியாயினர். 5 பேர் படுகாயம் அடைந்தனர். இவர்கள் பெரம்பளூர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
திருச்சி புறநகர் பகுதியான கணேசபுரம் அருகே இரு சக்கர வாகனத்தில் வந்த கோவிந்தராஜன் (62) என்பவர் மாட்டுவண்டி மோதி நிகழ்விடத்திலேயே உயிரிழந்தார். இவர்கள் திருச்சி பெல் நிறுவனத்தில் வேலை பார்த்து வந்தவர்.
இதேபோல், திருச்சி-தஞ்சாவூர் தேசிய நெடுஞ்சாலையில் துவாகுடி அருகே அடையாளம் தெரியாத வாகனம் மோதி 40 வயது மதிக்கத்தக்க கோயில் பூசாரி பலியானார்.
இந்த விபத்துகள் குறித்து காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.