Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

‌‌நீல வ‌‌ண்ண‌ம் பள்ளி, கல்லூரி வாகனங்களுக்கு பூச வேண்டும்: தமிழக அரசு உத்தரவு!

‌‌நீல வ‌‌ண்ண‌ம் பள்ளி, கல்லூரி வாகனங்களுக்கு பூச வேண்டும்: தமிழக அரசு உத்தரவு!
, வெள்ளி, 11 ஜனவரி 2008 (12:56 IST)
மாணவர்கள் செல்லும் கல்வி நிறுவன வாகன விபத்துகளை கட்டுப்படுத்தும் வகையில், அவற்றின் நிறத்தை மாற்றி வடிவமைக்க தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

இதுகுறித்து வெளியிடப்பட்ட அரசிதழில். தமிழ்நாடு மோட்டார் வாகன விதியில் (1989) வரைவுத் திருத்தம் கொண்டு வரப்படுகிறது. இந்தத் திருத்தத்தின் அடிப்படையில், கல்வி நிறுவனங்களுக்கான வாகனங்களின் நிறம் மாற்றப்படுகின்றன. அனைத்து கல்வி நிறுவனங்களின் வாகனங்கள் முழுவதும் நீல நிறத்துக்கு (ஸ்கை ப்ளு) மாற்றப்பட வேண்டும். மேலும், பள்ளிக்கூட வாகனங்களில், `ஸ்கூல் பஸ்' என்று ஆங்கிலத்திலோ அல்லது பள்ளிப் பேருந்து என்று தமிழிலோ, பேரு‌ந்‌தி‌ன் முன் பகுதி மற்றும் பின் பகுதியின் மேற்புறத்தில் தடித்த எழுத்துகளில் நன்றாக தெரியும்படியாக எழுத வேண்டும். அதுபோல் கல்லூரி வாகனங்களில், கல்லூரிப் பேருந்து என்று தமிழிலோ அல்லது `காலேஜ் பஸ்' என்று ஆங்கிலத்திலோ எழுதப்பட்டு இருக்க வேண்டும்.

இந்த வாகனங்களின் பக்கவாட்டில் 60 சென்டிமீட்டர் விட்ட அளவிலும், வாகனங்களின் பின் மற்றும் முன் பகுதியில் 20 சென்டிமீட்டர் விட்ட அளவிலும் வட்டம் வரைந்து அதற்குள் அரசு குறிப்பிட்டுள்ள முத்திரையை வரைய வேண்டும். அதாவது, பள்ளி வாகனம் என்றால் பள்ளிப் பேருந்து மற்றும் ஸ்கூல் பேரு‌ந்து என்றும், கல்லூரி வாகனம் என்றால் காலேஜ் பேரு‌ந்து மற்றும் கல்லூரிப் பேருந்து அந்த வட்டத்துக்குள் வளைத்து எழுத வேண்டும். மேலும், பள்ளி வாகனம் என்றால் அந்த வட்டத்துக்குள் ஒரு சிறுவனும் சிறுமியும் பள்ளிக்குச் செல்வது போன்று படம் வரைய வேண்டும். அது கல்லூரி வாகனம் என்றால் 2 கல்லூரி மாணவிகள் பட்டம் பெறுவது போன்ற படம் வரைய வேண்டும்.

அனைத்து கல்வி நிறுவன வாகனங்களும் அடுத்ததாக எப்.சி.யை (தகுதிச் சான்றிதழ்) புதுப்பிக்க வருவதற்கு முன்பு இந்த உத்தரவின் அடிப்படையில் நிறத்தை மாற்றி இருக்க வேண்டும். கல்வி நிறுவன வாகனங்களைத் தவிர, பள்ளிக் குழந்தைகளை ஏற்றிச் செல்லும் ஆட்டோ ரிக்ஷாக்கள், ஷேர் ஆட்டோக்கள், தனியார் ஒப்பந்த வாகனங்கள் ஆகியவற்றில் `ஸ்கூல் சில்ரன்' என்று ஆங்கிலத்திலும், பள்ளிக் குழந்தைகள் என்று தமிழிலும் போர்டு எழுதி தொங்க விட வேண்டும்.

பள்ளிக் குழந்தைகளை ஏற்றிச் செல்லும் வாகனங்கள் விபத்துக்கு உள்ளாகும் சம்பவங்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருவதால், பாதுகாப்பை கருத்தில் கொண்டு இதுபோன்ற நடவடிக்கைகளை எடுப்பது கட்டாயமாகிவிட்டது. எனவேதான், மற்ற வாகனங்களில் இருந்து கல்வி நிறுவன வாகனங்களை வேறுபடுத்திக் காட்டுவதற்காக அவற்றுக்கென்று தனி நிறம் (ஸ்கை ப்ளு) அறிமுகம் செய்யப்படுகிறது. இதனால் மற்ற வாகன ஓட்டுனர்கள், கல்வி நிறுவன வாகனங்களைப் பார்த்து கூடுதல் எச்சரிக்கையுடன் ஓட்டுவார்கள். இந்த வரைவுத் திருத்தம் தொடர்பான கருத்துகள் மற்றும் ஆட்சேபனைகளை 30 நாட்களுக்குள் உள்துறை செயலாளருக்கு அனுப்பி வைக்க வேண்டும் எ‌ன்று அத‌ி‌ல் கூற‌ப்ப‌ட்டு‌ள்ளது.

Share this Story:

Follow Webdunia tamil