Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

இட ஒது‌க்‌கீ‌ட்டிற்கு சா‌தி ஒரு முக்கியக் கூறு: த‌மிழக அரசு!

இட ஒது‌க்‌கீ‌ட்டிற்கு சா‌தி ஒரு முக்கியக் கூறு: த‌மிழக அரசு!
, வியாழன், 10 ஜனவரி 2008 (19:44 IST)
க‌ல்‌வி ‌நிறுவன‌ங்க‌ளி‌ல் மாணவ‌ர் சே‌ர்‌க்கை‌‌யி‌ன் போது இட ஒது‌க்‌கீடு வழ‌ங்குவத‌ற்கு சா‌தி ஒரு முக்கிய கூறாக இருந்தாலும் அதை ம‌ட்டு‌மே அடி‌ப்படையாக எடு‌த்து‌க் கொ‌ள்ள முடியாது எ‌ன்று த‌மிழக அரசு உ‌ச்ச ‌நீ‌திம‌ன்ற‌த்‌தி‌ல் கூ‌றியு‌ள்ளது.

க‌ல்‌வி ‌நிறுவன‌ங்க‌ளி‌ல் மாணவ‌ர் சே‌ர்‌க்கை‌யி‌ன் போது சமூ‌க ‌ரீ‌தியாக ம‌ற்று‌ம் க‌ல்‌வி‌ ரீ‌தியாக‌ப் ‌பி‌ன்த‌ங்‌கிய வகு‌ப்புகளை‌ச் சே‌ர்‌ந்தவ‌ர்களு‌க்கு‌ம், தா‌ழ்‌த்த‌ப்ப‌ட்ட, பழ‌ங்குடி‌யி‌ன வகு‌ப்புகளை‌ச் சா‌ர்‌ந்தவ‌ர்களு‌க்கு‌ம், ‌மிகவு‌ம் ‌பி‌ற்படு‌த்த‌ப் ப‌ட்டவ‌ர்களு‌க்கு‌ம் 69 ‌விழு‌க்காடு இட ஒது‌க்‌கீடு வழ‌ங்க‌ப்படு‌ம் எ‌ன்ற த‌ன்னுடைய கொ‌ள்கையை ‌நியாய‌ப்படு‌த்‌தி உ‌ச்ச ‌நீ‌திம‌ன்ற‌த்‌தி‌ல் த‌மிழக அரசு இ‌‌ன்று மனு தா‌க்க‌ல் செ‌ய்த‌து.

அ‌‌தி‌ல் "மே‌ற்கு‌றி‌ப்‌பி‌ட்டவ‌ர்களை பொருளாதார‌த்தை ம‌ட்டு‌ம் அடி‌ப்படையாக‌க் கொ‌ண்டு‌ள்ள ‌கி‌ரி‌மி லேய‌ர் முறை‌யி‌ன் மூல‌ம் இட ஒது‌க்‌‌கீ‌ட்டு‌ப் பல‌ன்க‌ளி‌ல் இரு‌ந்து ‌வில‌க்‌கி வை‌ப்பது சாதாரண ‌விடயம‌ல்ல.

ப‌யி‌ர்க‌ள் ந‌ல்ல ‌விளை‌ச்சலை‌த் தரு‌ம்போது ‌விவசா‌யிக‌‌ளி‌ன் வருமானமும் அ‌திக‌ரி‌க்கு‌ம். அதுவே வற‌ட்‌சி கால‌த்‌தி‌ல் அவ‌ர்க‌‌ளி‌ன் உணவு‌க்கான வருமானமே கே‌ள்‌வி‌க் கு‌றியா‌கி‌விடு‌ம். அ‌ப்போது, ஒரு ஆ‌ண்டு அவ‌ர் ‌கி‌ரி‌மி லேய‌ர் முறை‌க்கு‌ள் வருவா‌ர். ம‌ற்றொரு ஆ‌ண்டு வரமா‌ட்டா‌ர்.

த‌மிழக‌த்‌தி‌‌ன் மொ‌த்த ம‌க்க‌ள் தொகை‌யி‌ல் 88 ‌விழு‌க்கா‌ட்டின‌ர், சமூ‌க‌ ரீ‌தியாக ம‌ற்று‌ம் க‌ல்‌வி ‌ரீ‌தியாக‌ப் ‌பி‌ன்த‌ங்‌கிய வகு‌ப்புகளை‌ச் சே‌ர்‌ந்தவ‌ர்களாகவு‌ம், தா‌ழ்‌த்த‌ப்ப‌ட்ட, பழ‌ங்குடி‌யி‌ன வகு‌ப்புகளை‌ச் சா‌ர்‌ந்தவ‌ர்களாகவு‌ம், ‌மிகவு‌ம் ‌பி‌ற்படு‌த்த‌ப் ப‌ட்டவ‌ர்களாகவு‌ம் உ‌ள்ளன‌ர். ‌

கட‌ந்த 1980 ஆ‌ண்டு முத‌ல் இவ‌ர்களு‌க்கு 68 ‌விழு‌க்காடு இட ஒது‌க்‌கீடு வழ‌ங்க‌ப்ப‌ட்டு வ‌ந்தது. 93 ஆவது அர‌சிய‌ல் அமை‌ப்பு‌ச் ச‌ட்ட‌த்‌‌திரு‌த்த‌த்‌தி‌ற்கு‌ப் ‌பிறகுதா‌ன், த‌னியா‌ர் க‌ல்‌வி ‌நிறுவன‌ங்க‌ளி‌ல் ‌பி‌ற்படு‌த்த‌ப்ப‌ட்டவ‌ர்களு‌க்கு‌ம், தா‌ழ்‌த்த‌ப்ப‌ட்ட, பழ‌ங்குடி‌யின வகு‌ப்புகளை‌ச் சே‌ர்‌ந்தவ‌ர்களு‌க்கு‌ம் இட ஒது‌க்‌கீடு வழ‌ங்கு‌ம் ச‌ட்ட‌ம் (Tamil Nadu Backward Classes SC/ST (Reservation of seats in private educational institutions) Act 2006) கொ‌ண்டுவர‌ப்ப‌ட்டது.

மேலு‌ம், மாணவ‌ர் சே‌ர்‌க்கை‌யி‌ல் இட ஒது‌க்‌கீ‌ட்டை வழ‌ங்குவத‌ற்கு சா‌தி ஒரு மு‌க்‌கிய‌க் கூறு எ‌ன்பதை மறு‌க்க‌வி‌ல்லை. அதே நேர‌த்‌தி‌ல் ம‌ற்ற மு‌க்‌கிய‌க் கூறுக‌ளி‌ல் ஒ‌‌ன்றுதா‌ன் சா‌தியே த‌விர, அது ம‌ட்டுமே மு‌க்‌கிய‌‌க் கூற‌ல்ல" எ‌ன்று த‌மிழக அரசு கூ‌றியு‌ள்ளது.

இ‌ந்த மனுவை ‌விசா‌ரி‌த்த ‌‌நீ‌திப‌திக‌ள் அ‌ர்‌ஜி‌த் பசாய‌த், ‌பி.சதா‌சிவ‌ம் ஆ‌கியோ‌ரை‌‌க் கொ‌ண்ட அம‌ர்வு, வழ‌க்கை தே‌தி கு‌றி‌ப்‌பிடாம‌ல் த‌ள்‌ளிவை‌த்தது.

Share this Story:

Follow Webdunia tamil