Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

கருணா‌நி‌தி தலைமை‌யி‌ல் அமை‌ச்சரவை கூ‌ட்ட‌ம்!

கருணா‌நி‌தி தலைமை‌யி‌ல் அமை‌ச்சரவை கூ‌ட்ட‌ம்!
, வியாழன், 10 ஜனவரி 2008 (18:03 IST)
தமிழக அமைச்சரவையின் ஆலோசனை கூட்டம் இன்று காலை 10 மணிக்கு தலைமைச் செயலகத்தில் முதலமை‌ச்ச‌ரகருணா‌நி‌தி தலைமை‌யி‌லநடைபெ‌ற்றது. சுமார் 2 மணி நேரம் நட‌ந்ஆலோசனை கூ‌ட்ட‌த்த‌ி‌ல், பல்வேறு வளர்ச்சி திட்டங்கள் குறித்து விவாதிக்கப்பட்டது. அதில் கொள்கை முடிவுகளும் மேற்கொள்ளப்பட்டன.

தமிழக அரசு சிமெண்ட் விலையை நேற்று குறைத்து அறிவித்தது. ஒரு மூட்டை சிமெண்ட் விலை ரூ.200 என்று நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. இதில் இடைதரகர்கள் குறுக்கிட்டு முறைகேடுகள் செய்யாமல் இருக்க எத்தகைய நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்றும் அமைச்சரவை கூட்டத்தில் ‌விவா‌தி‌க்க‌ப்ப‌ட்டது.

தமிழக சட்ட‌ப்பேரவகூட்டம் இ‌மாத இறுதியில் துவ‌ங்உள்ளது. அதில் ஆளுந‌ரப‌ர்னாலஉரையாற்று‌கிறா‌ர். இதற்காக தற்போது ஆளுந‌ரஉரை தயாரிக்கப்பட்டு வருகிறது. ஆளுன‌ரஉரையை இடம் பெற வேண்டிய அரசின் கொள்கை முடிவுகளுக்கு ஒப்புதல் அளிப்பது தொடர்பாகவும் அமைச்சரவை கூட்டத்தில் பேசப்பட்டது.

Share this Story:

Follow Webdunia tamil