சென்னைக்கு வரும் 11ஆம் தேதி வரும் குஜராத் முதலமைச்சர் நரேந்திர மோடிக்கு அ.இ.அ.தி.மு.க. பொதுச் செயலாளர் ஜெயலலிதா விருந்து கொடுப்பதை கண்டித்து மாநிலம் தழுவிய போராட்டம் நடத்தப்படும் என்று தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் அறிவித்துள்ளது.
இது குறித்து தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத்தின் பொதுச் செயலாளர் முகமது முனீர், பொருளாளர் அபுபக்கர் ஆகியோர் செய்தியாளர்களிடம் கூறுகையில், குஜராத் முதல்வர் நரேந்திர மோடிக்கு, ஜெயலலிதா விருந்து கொடுப்பது ஒட்டு மொத்த முஸ்லிம் மக்களையும் வேதனைப்படுத்தி உள்ளது.
மோடியின் சென்னை வருகையை கண்டித்து ஜனவரி 14ம் ஆர்ப்பாட்டம் நடத்தப்படும். மேலும் மே 10 மற்றும் 11 ஆகிய தேதிகளில் விழிப்புணர்வு கூட்டம் நடத்தப்படும் என்று அவர்கள் கூறினர்.