இந்திய விண்வெளி ஆராய்ச்சி கழகத்தின் அகமதாபாத் மையம், ஆபத்தில் சிக்கியுள்ள மீனவர்களுக்கு உதவக்கூடிய புதிய தகவல் தொடர்புக் கருவியை உருவாக்கியுள்ளது.
செயற்கைக் கோள் உதவியுடன் இயங்கக் கூடிய இந்தக் கருவி, இந்திய கடலோர காவல் படையிடம் இன்று ஒப்படைக்கப்பட்டது. சென்னையில் உள்ள கடலோர காவல் படையின் கிழக்கு பிராந்திய தலைமையகத்தில் இன்று நடந்த நிகழ்ச்சியில், புதிய கருவியை கடலோர காவல் படையின் கிழக்கு பிராந்திய தளபதி ஜெனரல் ராஜேந்திர சிங் பெற்றுக் கொண்டார்.
மேலும், இந்தக் கருவி சில உள்ளூர் மீனவர்களுக்கும் வழங்கப்பட்டதுடன், மீன்பிடி படகுகளிலிருந்து அதைப் பயன்படுத்தும் விதம் குறித்து செயல் விளக்கமும் செய்து காட்டப்பட்டது. இந்நிகழ்ச்சியில், தமிழக மீன்வளத் துறை அமைச்சர் கே.பி.பி.சாமி சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார்.