Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

'78,000 போலி குடு‌‌ம்ப அ‌ட்டைக‌ள் நீக்கம்: அமை‌ச்ச‌ர் வேலு தவ‌க‌ல்!

'78,000 போலி குடு‌‌ம்ப அ‌ட்டைக‌ள் நீக்கம்: அமை‌ச்ச‌ர் வேலு தவ‌க‌ல்!
, செவ்வாய், 8 ஜனவரி 2008 (11:02 IST)
''தமிழகத்தில் 78,000 போலி குடு‌ம்அ‌ட்டைக‌ளநீக்கப்பட்டுள்ளன'' என்று உணவுத் துறை அமைச்சர் எ.வ.வேலு கூறியுள்ளார்.

இததொட‌ர்பாஅவ‌ரவெ‌ளி‌யி‌ட்டு‌ள்அ‌றி‌க்கை‌யி‌ல், மத்திய நிதி அமைச்சர் ப.சிதம்பரம் மதுரையில் பேசும் போது, மத்திய தொகுப்பில் இருந்து அரிசி, கோதுமை போன்றவற்றுக்கு வழங்கப்படும் மானியத்தில் 36 ‌விழு‌க்காடமக்களுக்கு போய் சேருவதில்லை என்றும், அதற்காக ‌நியாய‌விலகடைகள் முன்பு போராட்டம் நடத்தலாம் என்றும் கருத்து தெரிவித்துள்ளார். அவர் பேசியிருப்பது 2005ம் ஆண்டு புள்ளி விவரமாக இருக்கும் என்று கருதுகிறேன்.

2005ம் ஆண்டில் மத்திய திட்டக் குழு நடத்திய ஆய்வில்தான், இந்திய அளவில் சராசரியாக 36 ‌விழு‌க்காடஇத்தகைய பண்டங்கள் மக்களுக்குப் போய்ச் சேருவதில்லை என்று கணக்கெடுக்கப்பட்டுள்ளது. அதிலும் கூட, தமிழகத்தில் 15.66 ‌விழு‌க்காடஅளவுக்குத்தான் பொது வினியோக உணவுப் பொருட்கள் மக்களுக்கு சென்றடைவதில்லை என்று கூறப்பட்டுள்ளது.

மேலும், தமிழ்நாட்டில் ‌நியாய‌விலகடைகள் மட்டத்தில் உணவுப் பொருட்கள் 6.40 ‌விழு‌க்காடு‌ம், போலி அட்டைகள் மூலம் 9.26 ‌விழு‌க்காடு‌மவெளிச்சந்தைக்கு திருப்பப்படுவதாகவும் அதே அறிக்கை தெரிவிக்கிறது. இந்த ஆய்வின்படி, ரேஷன் பொருட்கள் கடத்தப்படுவது குறைந்த அளவில் உள்ள மாநிலங்களில் ஒன்றாகவே தமிழ்நாடு குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த அளவிற்கு கூட தவறுகள் நடைபெறக் கூடாது என்று முதல்வர் பிறப்பித்த ஆணையின் பேரில், கடத்தலை தடுக்க கடுமையான முயற்சிகள் எடுக்கப்பட்டு வருகிறது. கடந்த ஓராண்டில் 78,451 போலி கார்டுகள் நீக்கப்பட்டுள்ளன.

குற்றப்புலனாய்வுத் துறை முடுக்கி விடப்பட்டு ரேஷன் பொருட்கள் கடத்தப்பட்டால் உடனடியாக நடவடிக்கை எடுக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது. அரிசி கடத்தலில் ஈடுபட்ட கள்ளச்சந்தை தடுப்புச் சட்டத்தின் கீழ் 112 குற்றவாளிகளும் குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் 5 குற்றவாளிகளும் ஒன்றரை ஆண்டில் கைது செய்யப்பட்டுள்ளனர். மேலும், கடத்தல் பற்றி தகவல் அளிக்க உணவுத் துறை அமைச்சர் அலுவலகத்தின் பேக்ஸ் மற்றும் தொலைபேசி எண் விளம்பரப்படுத்தப்பட்டுள்ளது. முதல்வர் இந்த துறையிலே எந்தவிதமான குறைபாடும் நேரக் கூடாது என்பதில் மிகுந்த கண்ணும் கருத்துமாக இருக்கிறார். எனவே, இந்த துறையிலே தவறுகள் இருக்கும் என்று மத்திய நிதி அமைச்சர் கருதினால் விளக்கமாக அரசுக்கு சுட்டிக் காட்டலாம் எ‌‌ன்றஅமை‌ச்ச‌ரகூ‌றியு‌ள்ளா‌ர்.

Share this Story:

Follow Webdunia tamil